செஸ் எனப்படும் சதுரங்க விளையாட்டு பற்றி கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல்கள்

குப்தர்கள் ஆட்சி காலமான ஆறாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் முதன் முதலில் செஸ் தோன்றியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன;

Update: 2021-07-20 03:59 GMT

உலக சதுரங்க தினம்

உலக சதுரங்க தினமான இன்று செஸ் எனப்படும் சதுரங்கம் பற்றி கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல்கள்

குப்தர்கள் ஆட்சி காலமான ஆறாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் முதன் முதலில் செஸ் தோன்றியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. சத்ரங் என்ற பெயரில் தோன்றிய இந்த விளையாட்டு மெதுவாக பரிணாம வளர்ச்சி பெற்று 9 ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நுழைந்துள்ளது. ரஷ்யர்கள் இந்த விளையாட்டை பெரிதும் விரும்பி, மிகத் தீவிரமான முறையில் விளையாடத் தொடங்கினார்களாம்.


15 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் (Europe) காலூன்றியது. அங்கு பல்வேறு மாறுதல்களுக்கு பிறகு, செஸ் உலகமெங்கும் பரவியது. செஸ் சீனாவில் தோன்றியது என்று ஒரு தரப்பினர் சொன்னாலும், அது இந்தியாவில் தான் தோன்றியது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.

15 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த விளையாட்டில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிறைய மாற்றங்கள் செய்யப் பட்டன. முதன் முதலில் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான் புத்தகம் எழுதிய பெருமை லூயிஸ் ராமிரேஸ் (Luis Ramirez) என்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரையே சாரும். அவருடைய Repetition of Love and the Art of Playing Chess என்ற புத்தகம் இன்றளவிலும் போற்றப்படுகிறது.

உலகளவிலான செஸ் போட்டி 1851 ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. அதிசயமாக இதில் ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ஃப் ஆண்டர்சன் (Adolf Anderssen) என்பவர் வெற்றி பெற்றார். பிறகு, அமெரிக்காவை சேர்ந்த பால் மோர்பி (Paul Morphy) மிகக் குறுகிய காலத்திலேயே (1857-1863) உலக அளவில் பெரும் புகழ் பெற்றார். அதற்க்கு முன் இருந்த எல்லா பிரபல செஸ் விளையாட்டு வீரர்களையும் இவர் தோற்கடித்தார்.

இரண்டாம் உலகப் போருக்கு பின் நிறைய உலகப் போட்டிகள் நடத்தப்பட்டன. World Chess Federation (FIDE) 20 ஜூலை 1924 ம் தொடங்கப்பட்டதையே இப்போது நாம் உலக செஸ் தினமாகக் கொண்டாடுகிறோம்.

Tags:    

Similar News