2032 ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் நடைபெறும்

கடந்த 2000 ம் ஆண்டு சிட்னியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2032 ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் நடைபெறும் என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது

Update: 2021-07-22 06:34 GMT

2032ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் கடைசியாக, கடந்த 2000-ஆம் ஆண்டு சிட்னி நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 1956-இல் மெல்போா்ன் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து பிரிஸ்பேன் நகரில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்காக மகிழ்ச்சி தெரிவித்த அந்நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிசன், 'ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு என்ன தேவை என்பதை நாங்கள் அறிவோம்' என்றார்.

டோக்கியோவைத் தொடா்ந்து பாரீஸில் 2024-ஆம் ஆண்டும், பின்னா் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ஆம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News