நீங்க எந்த ராசி..? உங்களுக்கான அடையாளம் என்ன..? தெரிஞ்சுக்கங்க..!
Zodiac Signs in Tamil Meaning-ஜோதிடம் நமது வாழ்க்கையில் நம்பிக்கையின் அடிப்படையாக விளங்குகிறது. ராசிகளின் அடிப்படையிலேயே ஜாதகம் கணிக்கப்படுகிறது. ராசிகளின் குறிகளை இந்கு நாம் காணலாம்.;
Zodiac Signs in Tamil Meaning-12 ராசிகள் (கோப்பு படம்)
Zodiac Signs in Tamil Meaning-ஜோதிடம் என்பது நாம் நமது எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள பயன்படுத்திய ஒரு அற்புத கலையாக உள்ளது. மேலும் அது அறிவியலுடன் நெருங்கிய தொடர்பாகவும் உள்ளது. மிகப்பழமையான கீழை நாகரிகங்களான சீன மற்றும் சிந்து சமவெளி நாகரிகங்கள் மற்றும் மேலை நாகரிகங்களான சுமேரிய, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரிகங்களிலும், தென் அமெரிக்க கண்டத்தில் மாய, இன்கா நாகரிகங்களிலும், ஜோதிடக்கலை சிறப்பாக கையாளப்பட்டுள்ளது நமக்கு வரலாற்றின் மூலமாக தெரியவருகிறது.
ஜோதிடக் கலையில் தற்போது கிழக்கத்திய ஜோதிட முறையும், மேற்கத்திய ஜோதிட முறையும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் 12 ராசிகள் தான். அந்த 12 ராசிகள் என்னென்ன? அந்த 12 ராசிகள் குறித்த மேலும் பல தகவல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம் வாங்க.
12 ராசிகளின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன:
மேஷம் (Aries ), ரிஷபம்( Taurus ), மிதுனம்(Gemini ), கடகம் (Cancer), சிம்மம் (Leo ), கன்னி ( Virgo), துலாம் ( Libra), விருச்சிகம் (Scorpio ), தனுசு (Sagittarius ), மகரம் (Capricornus), கும்பம் (Aquarius) மற்றும் மீனம் (Pisces).
மேற்கத்திய ஜோதிட சாஸ்திரத்தின் படி 12 ராசிகள் ஒவ்வொரு மாதத்தின் அடிப்படையிலும் வருவதாக கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் கீழ்க்கண்ட ஆங்கில மாதங்களில் பிறந்தவர்கள் அந்தந்த மாதங்களுக்குரிய ராசியில் பிறந்தவராக, மேலைநாட்டு ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்துகிறது.
12 ராசிகளுக்குரிய ஆங்கில மாதப் பிறப்பு
- மார்ச் மாதம் 21 முதல் ஏப்ரல் மாதம் 20 வரை மேஷம்
- ஏப்ரல் மாதம் 20 முதல் மே மாதம் 21 வரை ரிஷபம்
- மே மாதம் 21 முதல் ஜூன் மாதம் 21 வரை மிதுனம்
- ஜூன் மாதம் 21 முதல் ஜூலை மாதம் 23 வரை கடகம்
- ஜூலை மாதம் 23 முதல் ஆகஸ்ட் மாதம் 23 வரை சிம்மம்
- ஆகஸ்ட் மாதம் 23 முதல் செப்டம்பர் மாதம் 23 வரை கன்னி
- செப்டம்பர் மாதம் 23 முதல் அக்டோபர் மாதம் 23 வரை துலாம்
- அக்டோபர் மாதம் 23 முதல் நவம்பர் மாதம் 22 வரை விருச்சிகம்
- நவம்பர் மாதம் 22 முதல் டிசம்பர் மாதம் 22 வரை தனுசு
- டிசம்பர் மாதம் 22 முதல் ஜனவரி மாதம் 20 வரை மகரம்
- ஜனவரி மாதம் 20 முதல் பிப்ரவரி மாதம் 19 வரை கும்பம்
- பிப்ரவரி மாதம் 19 முதல் மார்ச் மாதம் 21 வரை மீனம்
ராசியில் பாலின வகைப்படும் உள்ளன:
ஆண் ராசிகள்
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்
பெண் ராசிகள்
ரிஷபம் ,கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் , மீனம்
மேலும் 12 ராசிகளையும் அதன் செயல்படும் தன்மை வைத்து "சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி" என மூன்று வகையாக இந்திய ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்துகின்றது.
"சர ராசி" என்பது ஓரிடத்தில் நில்லாது தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் ராசியாகும்.
"ஸ்திர ராசி" என்பது எப்போதும் ஓர் இடத்திலேயே இருந்து செயல்படக்கூடிய ராசியாகும்.
"உபய ராசி" என்பது சில சமயங்களில் நகர்வதும், சில சமயங்களில் ஓரிடத்திலேயே நின்று விடுவதும் என இருவேறு தன்மைகளை வெளிப்படுத்தக்கூடிய ராசியாகும்.
சர ராசிகள்
மேஷம்,கடகம், துலாம், மகரம்
ஸ்திர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்
உபய ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளும் பஞ்ச பூதங்களில் "நீர், நெருப்பு, காற்று, நிலம்" என்கிற நான்கின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நெருப்பு ராசிகள்
மேஷம், சிம்மம், தனுசு
நில ராசிகள்
ரிஷபம், கன்னி, மகரம்
காற்று ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம்
நீர் ராசிகள்
கடகம், விருச்சிகம், மீனம்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2