திருமணத்தில் இல்லற இன்பத்துக்கு யோனிப்பொருத்தம் முக்கியமுங்க..!

Yoni Porutham Meaning in Tamil-வாழ்க்கை இனிமையாக இருக்க பல பொருத்தங்கள் இணைந்து இருக்க வேண்டும். சிலவை முக்கியம் இல்லையெனினும் சில பொருத்தங்கள் அவசியமாகிறது.;

Update: 2022-08-11 05:10 GMT

Yoni Porutham Meaning in Tamil

திருமண பொருத்தம் - யோனி பொருத்தம்:

Yoni Porutham Meaning in Tamil

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மிருகமாக கொள்ளப்படுகிறது. அதன் படி இந்த பொருத்தம் கணக்கிடப்படுகிறது. பகைமையல்லாத யோனி இருந்தால் பொருத்தம் உண்டு. பகைமையான மிருகங்கள் என்றால் யோனி பொருத்தம் இல்லை.

பகமையான மிருகங்கள் வந்தால் பொருத்தம் இல்லை. இல்லற சுகத்தை அடிப்படையாக கொண்ட இந்த பொருத்தம் இருந்தால் மட்டுமே வாழ்க்கை என்றும் திகட்டாத சுவையாக இருக்கும். இந்த பொருத்தம் ஆண், பெண் இருவரின் தாம்பத்திய உடல் அமைப்பைப் பற்றியது. இந்த பொருத்தம் இருந்தால் இல்லறம் எண்ணும் தாம்பத்தியம், உடல் உறவு போன்ற சிற்றின்பங்கள் சிறப்பாக இருக்கும். இந்த பொருத்தம் இல்லையென்றால் தாம்பத்தியம் இனிக்காது என்றும் கூறுவார். நட்சத்திர அடிப்படையில் மிருகங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அசுவினி - ஆண் குதிரை

பரணி - ஆண் யானை

கார்த்திகை - பெண் ஆடு

ரோகிணி - ஆண் நாகம்

மிருகசீரிஷம் - பெண் சாரை

திருவாதிரை - ஆண் நாய்

புனர்பூசம் - பெண் யானை

பூசம் - ஆண் ஆடு

ஆயில்யம் - ஆண் பூனை

மகம் - ஆண் எலி

பூரம் - பெண் எலி

உத்தரம் - எருது

அஸ்தம் - பெண் எருமை

சித்திரை - ஆண் புலி

சுவாதி - ஆண் எருமை

விசாகம் - பெண் புலி

அனுஷம் - பெண் மான்

கேட்டை - கலைமான்

மூலம் - பெண் நாய்

பூராடம் - ஆண் குரங்கு

உத்திராடம் - மலட்டு பசு

திருவோணம் - பெண் குரங்கு

அவிட்டம் - பெண் சிங்கம்

சதயம் - பெண் குதிரை

பூரட்டாதி - ஆண் சிங்கம்

உத்திரட்டாதி - பாற்பசு

ரேவதி - பெண் யானை

இவற்றில், பொருத்தம் இல்லாதவை

பாம்பு x கீரி

யானை x சிங்கம்

குரங்கு x ஆடு

மான் x நாய்

எலி x பூனை

குதிரை x எருமை

பசு x புலி

மேலே உள்ளது படி இருந்தால், பொருத்தம் இல்லை. இந்த பொருத்தம் சரியாக இல்லையென்றால் இன்பங்கள் குறைவு தான். அதனால் இந்தப்பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். ஒவ்வொரு பொருத்தமும் ஒவ்வொரு வகையில் வாழ்க்கைக்கு உதவுகின்றன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News