கிரக ஓரைகளினால் என்ன பயன்?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும். ஓரையை அறிந்து சுப காரியங்களுக்கு பயன்படுத்தினால் எண்ணிய செயல்கள் சிறப்பாக நடைபெறும்.
மொத்தம் ஏழு விதமான ஓரைகள் உள்ளன.
சூரிய ஓரை - உயர் அதிகாரிகளை சந்திக்க உகந்தது.
சந்திர ஓரை - பிரயாணங்கள் மேற்கொள்ள உகந்தது.
செவ்வாய் ஓரை - நெருப்பு சம்பந்தமான வேலைகளுக்கு உகந்தது.
புதன் ஓரை - அனைத்து சுப காரியங்களுக்கும் உகந்தது.
குரு ஓரை - அனைத்து சுப காரியங்களுக்கும் உகந்தது.
சுக்கிர ஓரை - அனைத்து சுப காரியங்களுக்கும் உகந்தது.
சனி ஓரை - அழிவு செயல்கள் அனைத்திற்கும் உகந்தது.