எந்த ராசிக்காரருக்கு மேற்கு வீடு ராசியானது? வாங்க பார்க்கலாம்..!
West Facing House Vastu in Tamil-வாஸ்து சாஸ்திரத்தில் மேற்கு திசை வீடுகள் யாருக்கெல்லாம் சிறப்பு தரும் என்று பார்க்கலாம் வாங்க.
West Facing House Vastu in Tamil
மேற்கு திசை பொது விபரம்
பகல் முழுவதும் பூமிக்கு ஒளி தரும் சூரியன் மாலையில் மேற்கில் மறைகிறான். ஜோதிட சாஸ்திரத்தின்படி மேற்கு திசை சனிபகவானுக்குரிய திசையாக கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் உண்டாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திர கலையில் மேற்கு திசையின் முக்கியத்துவம் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
நமது சாஸ்திரங்களில் சூரியன் அஸ்தமிக்கும் மேற்கு திசை நவகிரகங்களில் 'சனி' கிரக ஆதிக்கத்திற்கு உட்பட்ட திசையாக கூறப்பட்டுள்ளது. மேற்கு திசைப் பார்த்தவாறு வீட்டின் தலைவாயில் இருக்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் ஏற்படும். நோய்களால் அத்தகைய வீட்டில் வசிப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படமாட்டார்கள்.
உழைப்பாளிகள்
மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். எந்நேரமும் ஓய்வின்றி ஏதாவது செய்து கொண்டேயிருப்பார்கள். சனி பகவான் உலோகங்களில் இரும்பு மீது ஆதிக்கம் நிறைந்தவர். இரும்பு வியாபாரம், இரும்பு பொருட்கள் தயாரிப்பு, பாத்திரக்கடை, வாகன தொழில் போன்ற வியாபாரங்கள், தொழில்களில் இருப்பவர்கள் மேற்கு திசை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பது அவர்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்.
யாருக்கு சிறப்பு ?
ஜோதிடத்தில் சனி பகவானின் ராசிகளான மகரம், கும்பம் ராசியினர் மேற்கு திசையில் தலைவாயில் உள்ள வீடுகளில் வசிப்பது, அந்த மேற்கு திசையை பார்த்தவாறு தலைவாயில் வைத்து சொந்த வீட்டை கட்டி குடிபுகுவது இந்த இரு ராசியினருக்கும் நீண்ட ஆயுள் மற்றும் நிறைவான செல்வம் கிடைக்கும் நிலையை உருவாக்கும் என்பது வாஸ்து சாஸ்திர விதியாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2