காரியம் வெற்றி பெறணுமா..அப்பன் விநாயகன் இருக்கான்..தொழுது பாருங்க..!

Vinayagar Quotes in Tamil-விநாயகன் அருளிருந்தால் வந்த வினைகள் எல்லாம் மாயமாக மறைந்துபோகும். ஆலமரத்தடியில் வீற்றிருக்கும் வேலவனின் சோதரா..வினை தீர்க்க வாராய்.;

Update: 2022-09-30 10:46 GMT

Vinayagar Quotes in Tamil

Vinayagar Quotes in Tamil-விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். கணபதி என்றிட கலங்கும் வல்வினை; கணபதி என்றிட காலனும் கைதொழும்; கணபதி என்றிட கருமம் ஆதலால், கணபதி என்றிட கவலை தீருமே. ஞானம், ஆரோக்கியம், செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித் தரும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டநம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வோம்.

  • வெற்றிக் கணபதி புதிய வெற்றிகளை குவித்து, உங்களை வளப்படுத்தட்டும். விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்..
  • விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..கணபதி என்றிட கலங்கும் வல்வினை; கணபதி என்றிட காலனும் கைதொழும்; கணபதி என்றிட கருமம் ஆதலால், கணபதி என்றிட கவலை தீருமே..
  • ஞானம், ஆரோக்யம், செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித் தரும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டநம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வோம்..
  • உன்னை நினைத்து உயிர் உருகி செய்யும் செயல் யாவையும் , வெற்றியாக்குபவனே, முழுமுதற் கடவுளே, வினைதீர்க்கும் விநாயகனே, விநாயகர் சதுர்த்தி கொண்டு உம் அடிபணிந்து வணங்குகிறோம், காத்தருள்வாய் கணேசா..!
  • கற்பக ஜோதியே, சுடர் ஒளியின் தேவனே, அண்டம் முழுதும் தொந்தியில் அடக்கியவனே, நீ விரும்பி உண்ணும் கொழுக்கட்டையாய் நான் மாற வரம் வேண்டி உன் சரணம் தொழுகின்றேன் என் அப்பனே..
  • நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன்..! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..
  • செயல்களின் தொடக்கமானவனுக்கு, தமிழ்க் கடவுளின் தனயனுக்கு, பெற்றோரை உலகமாக்கியவனுக்கு, விழா எடுப்போர் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்..
  • காக்கும் கடவுள், கணேசனை நினை.. கவலைகள் அகல அவன் அருளே துணை.. வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..
  • அருகம்புல் பிரியனே, உருகி உனை நினைத்தே வாழ்கிறோம்.. வினைதீர்த்து அருள் புரிவாய் தொந்திக் கணபதியே.. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்..
  • வேலவனுக்கு முன்னவனே, வேண்டுதலுக்கு உரியவனே, ஒவ்வொரு வேளைக்கும் அருள் புரிபவனே, உனை வேண்டி நின்று வாழ்கிறோம். எம் வினை தீர்த்து, வேண்டுதல்களுக்கு விடைதருவாய், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..
  • முதல் கடவுள் நீதான், எங்கள் குலக் கடவுளும் நீதான்.. உன்னை நாடி வரும்போது, உள்ளத்தை சுத்தமாக்கி வாழ்க்கையை நல்லதாக்கி வாழ்ந்திட வையப்பா, வையகம் வாழ்த்தும் விநாயகா.. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..
  • பாலும் தெளிதேனும், பாகும் பருப்பும், இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன். கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.. வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா..! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
  • ஞானம் தருவாய்..ஆரோக்யம் பேணுவாய்.. செல்வம் தருவாய்..தந்த கணபதியே..எல்லா வளமும் தந்தாய் கணபதியே.. விரதம் இருந்து வழிபட்டோம் உன் அருள்தேடியே...சகல வளத்தையும் அள்ளித்தருவாய் வெற்றி .விநாயகா..! சிறப்பாக வாழ்வோம்.விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
  • யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள் அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள். ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உருப்பொருள். உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
  • முழுமுதற் கடவுளே விநாயகா..அகிலம் ஆண்ட கணபதியே..பெற்றோர் உலகம் என உணர்த்திய முழுப்பொருளே..மூலவனே..சிவ-பார்வதிக்கு மூத்தவனே..குதித்த தருவாய் நலமும் வளமும் எங்கள் தொந்திக் கணபதியே..விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!
  • சிவ மைந்தன்.. யானைமுகத்தோன்.. விநாயகர் உங்கள் வாழ்க்கையில் அனைத்து தடைகளையும், சிக்கல்களையும் நீக்குவார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மனமார்ந்த இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
  • விநாயகர் உங்கள் வீட்டில் செழிப்பைத் தர அதிர்ஷ்டம் நிறைந்த பையுடன் உங்கள் வீட்டுக்கு வாசம் செய்ய வருவாராக..செல்வம், ஆரோக்யம், கல்வி பெருகட்டும்..முழுமுதற் கடவுளே விநாயகா... விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..
  • நாம் துக்கங்களை அழிப்பார்.. மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவார்..அவரை அடி தொழுதால்..நம்மைச் சுற்றி நன்மைகளை உருவாகும்.. கணபதியை கண்ணாற கண்டு வணங்குங்கள்..இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!
  • கணபதியை கை தொழுதால்..நம்பிக்கை அவன் மீது வைத்தால் தும்பிக்கை தூக்கியே..நம்மை ஆசீர்வதிப்பான்..வாழ்க்கை அது உயரும்..வந்த வினைகள் பறந்தோடும்..விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..
  • தும்பிக்கையால் பாதம் கண்டு நம்பிக்கையோடு எழுந்தேன்..ஞானக்கண் திறந்து வாழ்த்துவானே விநாயகன்..! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..
  •  பூமியை மழை ஆசீர்வதிப்பதைப் போல, விநாயகர் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் நம்மை ஆசீர்வதிப்பார். பிறவிப்பயனை கண்டேன் கரிமுகத்து கணபதி முகம் கண்டே..! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..
  • ஓம் கண் கணபதியே நமோ நம.. ஸ்ரீ சித்திவிநாயக் நமோ நம.. அஸ்தா விநாயக் நமோ நம.. கணபதி பாப்பா மொரையா.. இந்த விநாயகர் மந்திரம் எல்லா தடைகளையும் நீக்கி, உங்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றிக்கு வழிகாட்டட்டும். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..

ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி என்றாலே விநாயகர் சதுர்த்தி என்போம். விநாயகர் விழா எடுப்போர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் ..

சரணம் சரணம் கணபதியே..உனக்குத் தோப்புக்கரணம் கணபதியே..வரணும் வரணும் இல்லம் தேடி தரணும் தரணும் வேண்டிய வரமே தரணும்..மறவோம்..மறவோம்..உன் முகமே..அது என்றும் திருமுகமே !

விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்..

உமையவளின் புதல்வனே..வேலனுக்கு முன்னவனே..நான்முகக் கடவுளே..அறுமுகம் சோதரனே யானைமுகத்தோனே, தும்பிக்கைத் தருவாய்..எங்கள் நம்பிக்கையாக..வருவாய்..வருவாய்..எங்கள் அழைப்புக்கு வருவாய்..வீட்டுக்கு ஒளி தருவாய்..! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.. இனிய பிள்ளையார் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News