வசியப்பொருத்தம் இருந்தால்தான் கணவன்-மனைவி காதல் மிளிரும்..! எப்டீன்னு பாருங்க..!
What is Vasiya Porutham-வசியம் என்பது ஈர்ப்பு. கணவனுக்கும் மனைவிக்கும் இந்த வசியப் பொருத்தம் இருந்தால்தான் வாழ்க்கை நல்லா இருக்கும். வாங்க பார்க்கலாம்.;
What is Vasiya Porutham
வசிய பொருத்தம்:
What is Vasiya Porutham
இந்த தலைப்பைப்பார்த்தாலே இது எந்த வகையானப்பொருத்தமாக இருக்கும் என்பது தெளிவாக தெரிந்திருக்கும். அட ஆமாங்க..வசியம்..என்பது ஒருவகை ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு இருந்தால்தான் கணவன் மனைவிக்கிடையே ஒரு அன்யோன்யம் ஏற்படும். காதலில் திளைப்பார்கள். வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் எல்லா பொருத்தங்களை பார்ப்பது சிரமம். இருப்பினும் அவைகளில் பொதுவாக 10 பொருத்தங்களை பார்ப்பது வழக்கம். அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் திருமணம் நிச்சயிக்கும் முன் இப்போது பார்க்கப்படுகின்றது.
பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.
கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்குமான அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், அது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசியப் பொருத்தம் அவசியம். அப்பொழுது தான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்பட்டு ஒருமித்து வாழ்வார்கள்.
வசியப் பொருத்தம் உள்ள தம்பதிகள் வாழ்க்கை முழுவதும் அன்புடனும், நிம்மதியுடனும் வாழ்வார்கள். வாழ்வில் சஞ்சலங்கள், சலனங்கள் ஏற்படாது. ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு ஏற்ற வசியம் உள்ள ராசியுடன் மட்டும் தான் பொருந்தும்.
பெண்ணின் ராசி எந்த ஆணின் ராசியுடன் பொருந்தும் என்பது கீழே கொடுக்க பட்டுள்ளது. மற்ற ராசிகள் பொருந்தாது.
மேஷத்திற்கு – சிம்மம், விருச்சகம்
ரிஷபத்திற்கு – கடகம், துலாம்
மிதுனத்திற்கு –கன்னி
கடகத்திற்கு – விருச்சிகம், தனுசு
சிம்மத்திற்கு – மகரம்
கன்னிக்கு – ரிஷபம், மீனம்
துலாமிற்கு – மகரம்
விருச்சகதிற்கு – கடகம், கன்னி
தனுசுவிற்கு – மீனம்
மகரத்திற்கு – கும்பம்
கும்பத்திற்கு – மீனம்
மீனத்திற்கு – மகரம்
மற்ற ராசிகள் பொருந்தாது. இந்த பொருத்தம் இருந்தால் தம்பதிகள் இடையே நல்ல ஒற்றுமை நிலவும்.மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2