இந்தியாவில் கோயில்களுக்கு இவ்ளோ சொத்து இருக்குதா..?

தொழில் அதிபர்கள் மட்டும்தான் பணக்காரர்களாக இருக்கவேண்டுமா..? நாங்களும் பணக்காரங்கதான் என்று இந்த கோயிலின் கடவுள்கள் சவால்விடுகிறார்களோ.!

Update: 2024-10-27 13:06 GMT

திருப்பதி வெங்கடேசப்பெருமாள் கோவில் தங்க ஆபரணங்கள் அலங்காரத்திற்கு மட்டுமானது.

இந்தியாவில் ஏராளமான கோயில்கள் உள்ளன. அதனால்தான் இந்தியா ஆன்மீக பூமி என்று அழைக்கப்படுகிறது. அந்த கோயிகளில் பல கோயிகள் பணக்காரக் கோயில்களாக உள்ளன. அவற்றில் நாம் பத்து கோயில்களின் வரிசையையும் அவற்றின் சொத்து மதிப்பையும் பார்க்கலாமா?

நமது கோயில்கள் நமது நாட்டின் வளமான ஆன்மிக பாரம்பரியத்தை பிரதிபலிப்பவையாக உள்ளன. நம் நாட்டில் 500,000 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அவற்றின் மீதான பக்தி மற்றும் நம்பிக்கையால் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கின்றன.

நமது கலாசாரம், சடங்குகள் மற்றும் நமது மதத்தை எவ்வாறு பாதுகாப்பது அல்லது தழுவுவது குறித்து நமக்கு நிச்சயமாகத் தெரியும். ஏனெனில் நாம் பக்திநெறியில் ஆழமான நம்பிக்கைக்கொண்டவர்கள். அதனால் தான் நம்நாட்டில் கோயில்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடைகள், தங்கம் மற்றும் வைர நகைகள் என வாரி வழங்கி வருகின்றனர். அதனால் பல கோயிகளின் பெட்டகங்கள் மலைபோல நிரம்பி வழிகின்றன. அவ்வாறான கோயில்களின் மதிப்புகளை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.


பத்மநாபசுவாமி கோயில் -கேரளா

திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில் உள்ளது. அது நூற்றாண்டு பழமைவாய்ந்த கோயில் ஆகும். அங்கு குவிந்துகிடக்கும் தங்க நகைகளை மதிப்பிட்டால் இந்திய அளவில் மட்டும் அல்ல,அது உலக அளவில் பணக்கார கோயில். பத்மநாபசுவாமி கோயில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கஜானாக்களில் தங்க நகைகளின் மதிப்பு ஒரு டிரில்லியனுக்கும் அதிகமானதாகக் கூறப்படுகிறது. விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அந்த கோயிலுக்கு விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்கள், சிலைகள் (மகாவிஷ்ணுவின் தங்க சிலை 500 கோடி ரூபாய் மதிப்புடையது), கிரீடங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட நன்கொடைகளைப் பெற்று வருகிறது. இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பல பெட்டகங்களில் இருப்பதாக நம்பப்படுகிறது.


திருப்பதி வெங்கட்டேஸ்வரர் கோயில்- ஆந்திரா

10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயில், உலகின் மிகப்பெரிய புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும். அரசாங்க இணையதளம் கணக்கின்படி, சராசரியாக 30,000 பக்தர்கள் தினமும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை கோயிலுக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள் என்கிறது. இது ஒவ்வொரு மாதமும் 180 மில்லியன் வரை உயர்கிறது என்றும் கூறுகிறது.

அது ஒவ்வொரு ஆண்டும் - கால்குலேட்டரில் பொருத்த முடியாத ஒரு எண்ணிக்கை - வரை உயர்ந்து செல்கிறது. தற்போது, ​​அதன் மதிப்பு 900 கோடிக்கு மேல் (கடந்த ஆண்டு நிலவரப்படி) மற்றும் 52 டன் தங்க ஆபரணங்களை வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் காணிக்கை மூலமாக உண்டியல் மூலமாக பெறப்படும் 3000 கிலோ தங்கம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருப்பு வைப்புத்தொகையாக கோயில் நிர்வாகம் டெபாசிட் செய்து வைத்துள்ளது.


ஸ்ரீ வைஷ்ணவாதேவி கோயில் -ஜம்மு

மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையான குகைக்குள் 5,200 அடி உயரத்தில், கத்ராவிலிருந்து 14 கிமீ தொலைவில் ஜம்முவில் இந்த அழகிய வைஷ்ணோ தேவி ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் 10 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வந்து செல்கிறார்கள். இந்த ஆலயம் வைஷ்ணவி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த கோயிலுக்கு 1.2 டன் அளவில் தங்கம் உள்ளது. மேலும் 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கிலோ தங்கம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இந்த ஆலயம் ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடைகளை பெற்று வருகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பணக்கார கோயில்களின் பட்டியலில் இதுவும் ஒன்றாகும்.


ஷீரடி சாய்பாபா கோயில் -நாசிக்

ஷீரடியின் சாய்பாபாவுக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பக்தர்கள் உள்ளனர். மேலும் ஏழைகளுக்கு உதவுவதில் பெயர் பெற்றவர். 2,000 கோடிக்கு மேல் தேவஸ்தானம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. கோயிலின் வங்கிக் கணக்கில் 380 கிலோ தங்கம், 4,428 கிலோ வெள்ளியுடன் சுமார் 1,800 கோடி ரூபாய் பணம் அத்துடன் டாலர்கள் மற்றும் பவுண்டுகள் வடிவில் ஏராளமான பணம் இருப்பதாகவும் தகவல்கள் தெரியா வந்துள்ளன.

மேலே குறிப்பிட்டுள்ள நம்பமுடியாத அளவிலான சொத்துக்களை வைத்துள்ளதால் பணக்கார கோயில் பட்டியலில் ஷீரடி சாய்பாபா கோயிலும் இணைகிறது.


குருவாயூரப்பன் கோயில் -கேரளா

குருவாயூரப்பன் கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்கு திசை நோக்கி உள்ளது. 33.5 மீ உயரமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி கம்பம் உள்ளது. இருப்பினும், கோயிலின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் பிரதான தெய்வத்தின் சிலை ஆகும். கோயிலின் சதுர ஸ்ரீகோவில் கல் அல்லது உலோகத்திற்கு பதிலாக பாதாள அஞ்சனம் என்ற அரிய கலவையால் ஆனது.

இந்த கோயிலுக்கு இரண்டாயிரத்து ஐநூறு கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது.


பொற்கோயில் -அமிர்தசரஸ்

இந்தியாவின் சிறந்த ஆன்மீக தலங்களில் பொற்கோயிலும் ஒன்றாகும். இது ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்றும் அழைக்கப்படுகிறது. இது சீக்கிய மதத்தினரின் புனிதமான ஆலயமாகும். மேலும் இது இன்றளவும் சீக்கியர்களின் புனிதமான ஆலயமாக போற்றப்படுகிறது. அதன் தெய்வீகத்தன்மை விவரிக்க முடியாத ஒரு உன்னத அனுபவத்தை தருவதாக உள்ளது. அதன் மேற்கூரையில்  400 kg தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கொந்தளிப்பான காலகட்டத்திற்குப் பிறகு, 1830 இல் மகாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் முற்றிலும் பளிங்கு மற்றும் தங்கத்தால் மீண்டும் கட்டப்பட்டது. குளத்தின் மையத்தில் தெரியும் பளபளக்கும் சன்னதியின் தோற்றம் எல்லையற்ற அமைதியைத் தருவதாக உல்ளது.

இந்த கோயிலுக்கும் ரூ.500கோடி மதிப்பிலான சொத்து மதிப்பு இருக்கிறதென்று கூறுகிறார்கள்.


சபரிமலை ஐயப்பன் கோயில் -கேரளா

சபரிமலையில் புனிதம் காற்றில் கரைந்து இருக்கிறது. சபரிமலை கோவில் மிகவும் செல்வம் கொழிக்கும் கோயிலாகும். உலகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. விளக்குகளின் அழகிய தூண்கள் அல்லது பதின்மூன்று வட்ட வடிவ கொள்கலன்களுடன் 7 மீ உயரமுள்ள தீபஸ்தம்பம் எரியும்போது பார்ப்பதற்கு பரவசமூட்டும்.

ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் நடந்து செல்கின்றனர். இது 15 கிலோ தங்கத்தை பெற்றுளளது. மேலும் அதன் ஆண்டு வருமானம் 230 கோடி ரூபாய்க்கு மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


சித்தி விநாயகர் கோயில் -மும்பை

நமது யூகங்களுக்கு அப்பாற்பட்டு இங்கு தினமும் 25 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையிலான பக்தர்கள் குவிகின்றனர். விநாயகப் பெருமான் தங்கக் கூரையின் கீழ் அமர்ந்துள்ளார். மேலும் கோவிலில் இதுவரை 67 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 158 கிலோ தங்கக் காணிக்கை குவிந்துள்ளது.

இது மும்பையின் பணக்கார கோயிலாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 125 கோடிகளை வசூலிக்கிறது. உலகெங்கிலும் உள்ள பிரபலங்களும் இந்த கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார்.


மதுரை மீனாட்சியம்மன் கோயில்- மதுரை

மதுரையில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் அதன் வருடாந்திர மீனாட்சி திருகல்யாண திருவிழாவின் போது சுமார் 1 மில்லியன் பக்தர்கள் வருகிறார்கள். அந்த நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 10 நாட்கள் நீடிக்கும். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், தங்கம் மற்றும் வைரம் வருவாயாக வருகிறது.  இதன் மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.


பூரி ஜெகந்நாதர் கோயில் -ஒடிசா

ஒடிசா மாநிலத்தின் பூரியில் அமைந்துள்ள ஜகநாத் கோவில், விஷ்ணுவின் வடிவமான ஜகநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். நம்பமுடியாத சுவாரஸ்யமான உண்மை. அங்கு 30,000 ஏக்கர் நிலம் பகவான் ஜகந்நாதரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவே அவரை பணக்கார நிலப்பிரபுவாக மாற்றுகிறது. அதன் தங்க நகைகள் நிறைந்து காணப்படாவிட்டாலும் நிலத்திற்கு உண்மையான உண்மையான மதிப்பீடு இல்லை என்கிறார்கள். என்றாலும், சுனா பேஷா விழாவின் போது தெய்வங்கள் 209 கிலோ தங்க நகைகளால் அலங்கரிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

Tags:    

Similar News