Thanusu Rasi in Tamil 2023-தனுசு ராசி ஐப்பசி மாத ராசிபலன்..! எப்படின்னு படிங்க..!

ஐப்பசி மாதத்தில் தனுசு ராசிக்கு நட்சத்திர அடிப்படையில் பலன்களை பார்ப்போம் வாருங்கள்.

Update: 2023-11-14 08:38 GMT

thanusu rasi in tamil 2023-தனுசு ராசிக்கான ஐப்பசி மாத பலன் (கோப்பு படம்)

Thanusu Rasi in Tamil 2023

ஐப்பசி மாத ராசி பலன்கள் 2023 – தனுசு

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

Thanusu Rasi in Tamil 2023

கிரகமாற்றம்:

01-11-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-112023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

Thanusu Rasi in Tamil 2023

பலன்:

யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப் படாமல் தனித்தன்மையுடன் விளங்கும் தனுசு ராசியினரே நீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரக சேர்க்கைகள் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்து வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

Thanusu Rasi in Tamil 2023

பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

Thanusu Rasi in Tamil 2023

மூலம்:

இந்த மாதம் பண வரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.

Thanusu Rasi in Tamil 2023

பூராடம்:

இந்த மாதம் குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். பெண்களுக்கு: மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும்.

Thanusu Rasi in Tamil 2023

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும்.

Thanusu Rasi in Tamil 2023

பரிகாரம்:

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள்: நவ 4, 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 28, 29, 30

Tags:    

Similar News