தஞ்சை பெரிய கோவிலின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்..!

Thanjai Periya Kovil History in Tamil-தஞ்சை பெரிய கோவில் பல சிறப்புகளை கொண்ட கோவிலாகும். தமிழகத்தின் சிறப்பைக் கூறும் தனித்துவமிக்கது.

Update: 2022-09-05 05:38 GMT

Thanjai Periya Kovil History in Tamil-தஞ்சாவூர் கோவில் மிகவும் சிறப்புடைய வரலாற்று அம்சம் பொருந்திய கோயிலாகும். தமிழர்களின பெருமையாக கருதப்படும் தஞ்சை கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இது நம் தமிழ் கட்டிட கலையின் பெருஞ்செல்வமாக கருதப்படுகிறது . இவ்வாறு சிறப்பு பல்வேறு சிறப்புகளைபெற்ற தஞ்சை பெரியகோவிலின் வரலாற்றை இங்கே  காண்போம்.

பெருவுடையார் கோவில்

இந்த பெருவுடையார் கோவில் உலகின் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாக உள்ளது.இந்த கோவிலை ராஜராஜ சோழன் 1005 ம் ஆண்டு ஆரம்பித்து 1010 ஆம் ஆண்டு கட்டி முடித்தார். அந்த காலத்தில் இதனை இவ்வளவு சிறப்பாக கட்டியிருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும். இந்த கோயிலின் கட்டிட கலையை நிர்ணயித்தவர் குஞ்சலராதன் என்ற கட்டிடக்கலை ஆய்வாளர் ஆவார். இந்த கோவில் பிரகதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு பிறகு பெருவுடையார் கோவில் என்று பெயர் மாற்றம் செய்யபட்டது.

இந்த பெரிய கோவிலில் பல ரகசிய அறைகள் இருப்பதாகவும் அந்த பல ரகசிய அறைகள் பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது . இந்த சிறப்பு மிக்க கட்டிடக் கலைகளை நாம் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துக் கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

தஞ்சை கோவிலின் மேற்கூரை

தஞ்சை பெரிய கோவிலின் மேற்கூரை சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மேற்கூரை 80 டன் கிரானைட் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இது ஒரே கல்லால் ஆனது. இந்த அதிகளவு எடையுள்ள கல்லை எவ்வாறு 216 அடி உள்ள கோபுரத்தின் மேலே எப்படி எடுத்து சென்றிருப்பார்கள் என்று அனைவருக்கும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

இந்தப் பாறையை யானைகள் மற்றும் வீரர்களை மட்டும் வைத்து தான் மேலே வைத்தனர் என்று ஒரு சில கருத்துகள் உண்டு . இந்த கல்லை வைக்க சாய்வுதள படிகட்டுகளை அமைத்து அதன் பின்னரே கல்லை மேலே எடுத்து சென்றனர் என்று மற்றொரு கூற்றும் உள்ளது. இந்த இரண்டில் எது உண்மையில் நிகழ்ந்திருக்கும் என்பது இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது.

கோவில் கருவறை

இந்த கோயிலின் கருவறையில் உள்ள சிவலிங்கம் அதிக மின்காந்த அலைகளைகொண்டது இது +ve (நேர்மறை அலைகள்)ஆற்றலை கொண்டதாகவும் உள்ளது. இந்த ஆற்றல் கோவிலை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பெரிய 80 டன் கல்லை மேலே வைத்துள்ளனர். இந்த நல்ல ஆற்றலால் மக்களுக்கு அமைதியும் மனதிற்கும் ,உடலிற்கும் அமைதி கிடைக்கிறது.

தஞ்சை ஓவியம்

இந்த தாஞ்சாவூரில் மிகவும் பிரபலமானது. அழகான மற்றும் சிறப்பம்சம் மிக்க ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியம் ராஜராஜ சோழனின் வரலாறு மற்றும் அவர்களின் மகத்துவத்தைப் பற்றி தெரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராஜராஜ சோழனின் சிவ பக்தியை இந்த ஓவியங்கள் எடுத்து கூறுகிறது. இந்திய ஓவிய வரலாற்றில் தஞ்சாவூர் ஓவியம் சிறந்த இடத்தை பெற்றுள்ளது. இந்த ஓவியங்கள் மிகவும் நேர்த்தியாகவும் புதிதாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கிரானைட் கல்

உலகில் சிறந்த மற்றும் உறுதியான கற்களில் ஒன்று இந்த கிரானைட் கல். இந்தக் கல் அதிக எடை மற்றும் உறுதியானது என்பதால் சிலைகள் செய்ய கடினமாக இருக்குமாம். இந்த கோவிலைக் கட்ட 1 லட்சத்து 30,ஆயிரம் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாறைகளை கோவிலிருந்து 80 கீ.மீ தூரத்திலிருந்து வாங்கி வந்துள்ளனர். இந்த கற்களை கொண்டுவர 1000 யானைகளையும் 5000 குதிரை வண்டிகளையும் பயன்படுத்தினார்கள் என்றும் தெரிகிறது.

கிரானைட் பாறைகளை வெட்ட பல தந்திரங்களை பயன்படுத்தியுள்ளார்கள். அந்த காலத்தில் நவீன போக்குவரத்து இல்லாமலே பல தூரத்திலிருந்து கற்களை மலையிலிருந்து சமவெளிக்கு எடுத்து வந்துள்ளனர். இந்த கோவில் சமவெளியில் கட்டப்பட்டது. ஆனால் பாறைகள் மலையிலிருந்து எடுத்து வரப்பட்டதால் எவ்வாறு எடுத்து வந்திருபார்கள் என்பதும் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

கோவில் சிறப்பம்சம்

1886ம் ஆண்டு ஹீல்ஸ் என்ற ஜெர்மன் நாட்டு அறிஞர் ராஜராஜ சோழன் தான் இந்த கோவிலை கட்டினார்

என்பதை ஆதார பூர்வமாக நிரூபித்தார். ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி தேவர் ஆவார். இந்த கோவில் சோழர்களின் கலை நயத்தை கூறுகிறது.

இந்த கோவிலின் பல ஆயிர கணக்கில் ஆட்கள் வேலை செய்த்ததாகவும் இந்த குறிப்புகள் கோவிலின் கல்வெட்டில் பொறித்திருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த கோவிலின் மொத்த அடி 216 இது தமிழ் உயிர்மெய் எழுத்துகளை குறிக்கிறது. சிவலிங்கத்தின் உயரம் 12 அடி ஆகும் இது உயர் எழுத்துகளை குறிக்கிறது. சிவலிங்க பீடத்தின் அடி 18 இது மெய் எழுத்துகளை குறிக்கிறது. கோவிலுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மொத்த அடி 247 ஆகும். இது தமிழின் மொத்த எழுத்துகளை குறிக்கிறது. இந்த கோவிலின் பல கட்டிடக்கலை சிறப்புகள் கோவிலின் கல்வெட்டிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலை யார் யார் கட்டினார்கள் என்பதையும் பல உழைப்பாளிகளின் பெயர்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் நிழல் மதிய நேரங்களில் பாதிதான் இருக்கும். கோவிலின் பாதி பகுதியின் நிழல் கீழே விழுவதில்லை என்பதும் ஒரு சிறப்பம்சம் என்றே கூறலாம். இது சோழர்களின் நேர்த்தியான கட்டிடக் கலையை எடுத்துரைக்கிறது .

நந்தி சிலை

இந்த கோவிலின் நந்தி சிலை மிகப்பெரிய அளவில் அழகாக இருக்கும். இந்த நந்தி வளர்ந்துகொண்டே இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த நந்தி மிகப் பிரம்மாண்டமானதாக இருக்கும். முதலில் இந்த நந்தி சிறியதாக இருந்ததால், இந்த நந்தி பிற்காலத்தில் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கோவிலில் அரச குடும்பம் செல்வதற்கு என்று தனி ரகசிய வழியைப் பயன்படுத்தினர். இந்த வழிகள் பல மர்மம் நிறைந்தது என்று மூடிவிட்டனர். இந்த ரகசிய வழிகள் பல இடங்களை இணைப்பதாகவும் கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News