திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குருபூஜை
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குருபூஜை பெருவிழா;
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பெருவிழா, ஐந்தாம் பிரகாரம் வீதி உலா, நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.