சகிப்புத்தன்மை வளர்க்கும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்: பலப்படுத்த முடிவு

சகிப்புத்தன்மை, கிறிஸ்தவ மக்களை ஒன்றிணைக்க பாடுபடும் ‘கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்’, பகுதி வாரியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-01-28 00:15 GMT

நல்லெண்ண இயக்க குழுவினர்.

சகிப்புத்தன்மையை வளர்க்கும் பணியை மேற்கொள்ளவும், கிறிஸ்தவ மக்களை ஒன்றிணைத்து செயல்பட்டு வருவதுமான  'கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்', பகுதி வாரியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுக்க கிறிஸ்தவர்கள் பரவியுள்ளனர். கத்தோலிக்க திருச்சபை, சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்தே சபை என, பல்வேறு சபைகளில் கிறிஸ்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர். சபைகள் வேறாக இருப்பினும், கிறிஸ்தவர்கள் செல்லும் தேவாலயம் மற்றும் ஜெபக்கூடங்கள் வேறாக இருப்பினும், அவர்கள் வணங்குவது கிறிஸ்துவை தான்; அவர்கள் சார்ந்திருப்பது, கிறிஸ்தவத்தை தான். அவர்கள் பின்பற்றுவது, 'பைபிள்' தான்.

எனவே, சபை பாகுபாடுகள் இருப்பினும், அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 'கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்களின் நலன் சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி, மத சகிப்பு தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடுகளுடன் செயல்பட்டு வந்த இந்த அமைப்பு, கடந்த சட்டசபை தேர்தலில் அரசியல் களத்திலும் குதித்தது. இந்த அமைப்பின் நிறுவனரான முனைவர் இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், இந்த அமைப்பை மாநிலம் முழுக்க, பலப்படுத்துவதற்கான முயற்சியில் அதன் நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். மாவட்டம், தாலுகா, வட்டம் வாரியாக உள்ள அனைத்து சபை சார்ந்த, கிறிஸ்தவர்களைம் ஒருங்கிணைத்து, இந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக்கும் பணி நடந்து வருகிறது.

அதன் நிர்வாகிகள் கூறுகையில்,'ஒரே கிறிஸ்து; ஒரே கிறிஸ்தவம்' என் கோட்பாட்டை வைத்து தான், நாங்கள் செயல்பட துவங்கி இருக்கிறோம். கிறிஸ்தவர்களின் நலன், உரிமை சார்ந்த விஷயங்களை நியாயமான முறையில் கையாளவும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறோம். வரும் நாட்களில், அரசியலில் ஆழ காலுான்றுவதற்கான ஆயத்தப்பணிகளில் இறங்கியுள்ளோம். சாதி, இனம், மதம் என்ற அரசியல், தனிநபர் காழ்ப்புணர்ச்சி இல்லாத, மக்களுக்கு ஆத்மார்த்தமாக நன்மை செய்யும் பிரதிநிதிகள் நமக்கு தேவை' என்றனர்.

Tags:    

Similar News