சிவ மந்திரத்தை தினமும் உச்சரிங்க..! சிறப்பாக வாழுங்க..! சிவமந்திரங்கள்..!
Sivan Manthiram in Tamil-இந்த பிரபஞ்சத்தை படைத்த சிவனை வழிபடுவோர் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். சிவ மந்திரத்துக்கு அவ்வளவு சக்தி உண்டு.;
Sivan Manthiram in Tamil
இந்த பிரபஞ்சம் சிவனால் உருவாக்கப்பட்டது. அவர் இரக்கத்தின் சின்னமாக விளங்குபவர். படைத்தல், காத்தல், அழித்தல் என்பதில் அழித்தல் தொழிலை ஏற்று இருப்பவர் இவர்.
ஆனால், இவரை யாரும் எளிதில் மகிழ்வித்துவிட முடியும். பயத்தைப் போக்க சிவ மந்திரங்களை உச்சரிக்கலாம். சிவ மந்திரத்தை உச்சரிப்பதால் நோய்களில் இருந்து விடுபட முடியும். பயம் மற்றும் கவலைகள் பறந்து போகும்.
சிவ மந்திரங்கள்
இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் ஏற்படும். சிவா மந்திரத்தை உச்சரிப்பதால் ஆழ் மனது வலிமை மற்றும் ஆற்றல் வெளிப்படுகிறது. உடல், மனம், ஆன்மா என்று சகலத்தையும் தூய்மைப் படுத்தும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு. மனிதன் அன்றாடம் சந்திக்கும் மன அழுத்தம், சோர்வு, தோல்வி, புறக்கணிப்பு, மற்றும் இதர எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றைப் போக்கி ஒரு தெளிவான மன நிலையை உருவாக்கும் சக்தி இந்த மந்திரங்களுக்கு உண்டு.
சிவமந்திரங்களை இந்த பதிவில் பார்ப்போம் :
- பஞ்சாக்ஷர சிவ ந்திரம்:
'ஓம் நம சிவாய' என்று சிவபெருமானை போற்றிவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப்பட்டது. "நான் சிவபெருமானை வணங்குகிறேன்" என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உடல் புனிதமடைகிறது, புத்துணர்ச்சியடைகிறது. அதன் மூலம் சிவபெருமானின் ஆசி கிடைக்கிறது.
- ருத்ர மந்திரம் :
'ஓம் நமோ பகவதே ருத்ரே' இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மத்திரத்தை உச்சரிப்பது பல வெற்றிகளுக்கு வழிவகுக்கும். இது ஒரு விருப்பத்தை நிறைவேற்றத் தர பயனுள்ளதாக இருக்கும்.
- சிவயத்ரி மந்திரம் :
'ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்' இந்து மதத்தில், காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது சிறப்புக்குரியது.
- சிவா தியான மந்திரம்:
'கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம் விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ' நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.
- மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:
'ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்' அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கிறது.
- ஏகதசா ருத்ர மந்திரம்
Sivan Manthiram in Tamil
இது 11 மந்திரங்கள் அடங்கிய ஒரு ஜெபம் ஆகும். இறைவன் சிவ பெருமானை வெவ்வேறு நிலைகளில் வழிபட இந்த மந்திரங்கள் பயன்படுகிறது. வருடத்தில் உள்ள மாதங்களைக் குறிக்கும் ஒரு மந்திரமாக இது விளங்குகிறது. நீங்கள் பிறந்த மாதத்திற்கான மந்திரத்தை நீங்கள் உச்சரிப்பதால் நல்ல பலனை பெறுவீர்கள். ஆனால் எல்லா 11 மந்திரங்களையும் சேர்த்தும் சொல்லலாம். சிவராத்திரி அன்று மகா ருத்ர யக்னம் நடைபெறும்போது இந்த பதினோரு மந்திரங்களையும் உச்சரிப்பது மிகுந்த பலனைத் தரும்.
கபாலி:
ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்
பிங்களா:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ மங்கலாய பின்கலாய ஓம் நமஹா
சிவன் மூல மந்திரம்:
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2