Sai Baba 11 Quotes in Tamil-சீரடி சாய் பாபா கருணையின் வடிவம்..!
சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார்.;
sai baba 11 quotes in tamil-சீரடி சாய் பாபா (கோப்பு படம்)
Sai Baba 11 Quotes in Tamil
சாய் பாபா பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அவருக்குப் 16 வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூறத் தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர்.
Sai Baba 11 Quotes in Tamil
சாயிபாபாவை இந்துக்களும், இசுலாமியரும் அற்புத மகானாகப் போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
சாயிபாபா நோய் தீர்க்கும் அற்புதங்களை நிகழ்த்தினார். குழந்தையில்லாத பலருக்கும் குழந்தை கிடைக்க அருளினார் என்றும்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு செய்த பல வகையான அற்புதங்கள் கணக்கிலடங்காதவை. இவையனைத்தும் சாயி அற்புதங்கள் (சாயிலீலைகள்) என்று இன்றும் போற்றப்படுகின்றன. அவர் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டாலும், தன்னிடம் (சீரடி) தேடி வருபவர்களுக்கு இன்றும் அவர் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி வருகிறார்.
Sai Baba 11 Quotes in Tamil
சாய் பாபாவின் 11 உறுதி மொழிகள்
1. ஷிர்டியில் காலடி படும் பக்தனுக்கு வரும் ஆபத்து விலகிவிடும் .
2. என் சமாதியின் படி ஏறுபவனின் அனைத்து துக்கங்களும் போக்குவேன்.
3. இவ்வுலகை விட்டு என் பூத உடல் மறைந்தாலும் பக்தன் அழைத்தால் ஓடி வருவேன் .
4. திட பக்தி , நம்பிக்கை விசுவாசத்துடன் யாசிப்பவன் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.
5. இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன் என்று எப்பொழுதும் உணரவும். இதனை சாத்தியமென்றறிந்து அனுபவம் பெறுவீர்.
Sai Baba 11 Quotes in Tamil
6. என்னை சரணடைந்தும் வெறும் கையோடு திரும்பினான் என்று எந்த பக்தனாவது இருந்தால் அவனை எனக்கு காண்பியுங்கள்.
7. பக்தர் என்னை எப்படிப்பட்ட பக்தியுடன் உணருகிறானோ , அப்படிப்பட்ட அனுபவங்கள் அவனுக்குத் தருவேன்.
8. எப்பொழுதும் உங்கள் சுமைகளை நான் சுமக்கிறேன் .என் வாக்கு பொய்யாவதில்லை
9. நீங்கள் கேட்பது எல்லாம் நான் கொடுப்பேன் . என் உதவியையும் , அருளையும் அள்ளித்தர நான் காத்திருக்கிறேன்.
10. பக்தியுடன் என் மொழிகளை மனதில் ஏற்பவனுக்கு நான் கடன் பட்டவன் ஆவேன்.
11. என் திருவடிகளை அடைந்த பக்தன் பெரும் பாக்கியவான் ஆவான்.