திருமண ராசிப்பொருத்தத்தில் எந்த எண் மாப்பிள்ளைக்கு பொருத்தமாகும்..? தெரிஞ்சிக்கலாம் வாங்க..!
Rasi Porutham in Tamil -திருமணப் பொருத்தம் பல வழிகளில் பார்க்கப்படுகிறது. நட்சத்திரப்பொருத்தம், ராசிப்பொருத்தம், பிறப்பு அடிப்படையிலான பொருத்தம் என்று பல வகையுள்ளன.;
rasi porutham in tamil-பொதுவாக திருமணப்பொருத்தத்தில் பெண் ஜாதகத்தை வைத்துதான் ஆண் ஜாதகங்களை பொருத்திப்பார்ப்பார்கள். நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் முக்கியமானவை. அதில் ராசிப் பொருத்தம் என்றால் என்ன? அதை எப்படிப் பார்க்கவேண்டும் என்று பார்ப்போம் வாங்க.
ராசிப் பொருத்தத்தில் பெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணும்போது 6-க்கு மேலிருந்தால் அது பொருந்தும்.
பொதுவாக 8-வது ராசி ஆகாது.
7வது ராசியானால் சிறப்பு.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்ற ராசிக்குப் பொருந்தாது.
2, 6, 8, ம் ராசிகள் ஆகாது.
1, 3, 5, 12 வது ராசிகள் வந்தால் மத்திமம் .
7, 9, 10, 11 வது ராசியாக வந்தால் உத்தமம்.
பெண் ராசியில் இருந்து எண்ணும்போது ஆண் ராசியானது 3 மற்றும் 11 ஆக வந்தால் மிகவும் நல்லது.
சஷ்டாஷ்டக தோஷம்
rasi porutham in tamil-பெண் ராசிக்கு, ஆண் ராசி 6, 8 எண்ணாகவோ அல்லது 8, 6 எண்ணாகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். சஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை பொருத்துவது நல்லதல்ல.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2