பைபிள் கூறும் நற்கருத்துகள்..! தெரிஞ்சுக்குவோம் வாங்க..!
Positive Bible Quotes in Tamil-நல்ல வார்த்தைகள் மனதைத் தூய்மைப்படுத்தும். குறிப்பாக நேர்மைறை வசனங்கள் தன்னம்பிக்கையைத் தரும்.;
மன தைரியம் ஊட்டும் பைபிள் வசனங்கள்
Positive Bible Quotes in Tamil
தமிழில் நேர்மறை பைபிள் வசனங்களை தினமும் படிப்பதால் அன்றைய தினத்தின் சாதாரண போராட்டங்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தானே வந்துவிடும். தமிழில் பைபிள் வசனங்களைப் படித்து, மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ நேர்மறை சிந்தனைகளைப் பெறுங்கள். பைபிள் கிறிஸ்தவ மதத்தின் புனித பொக்கிஷம். இது இயேசுவின் இருப்பு மற்றும் கிறிஸ்தவ ஸ்தாபனத்தின் கதையை விவரிக்கிறது. மிகவும் விதிவிலக்காக இயேசுவின் துவக்கத்தை பரப்புவதற்கு பவுலின் நடவடிக்கைகள். இது 27 புத்தகங்களைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில், இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. பின்னர் அது மற்ற எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் பைபிள் மேற்கோள்களைப் பார்ப்போம் வாங்க.
நேர்மறை தமிழ் பைபிள் வார்த்தைகள்
சிறுமை பட்டவனுக்கு
கர்த்தர் அடைக்கலமானவர்
கஷ்டப்படுகின்ற காலங்களில்
அவரே தஞ்சமானவர்.
-சங்கீதம் 9:9
கஷ்டத்திலே நீ கூப்பிட்டாய்
நான் உன்னை தப்புவித்தேன்.
-சங்கீதம் 81:7
அவர் ஒளியில் இருப்பது போல
நாமும் ஒளியிலே இருந்தால்
ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.
அவரின் மகன் இயேசுவின் ரத்தம்
சகல பாவங்களையும் நீக்கி
நம்மை காக்கும்.
-யோவான் 1:7
உன் பிள்ளைகள் எல்லோரும்
கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்
உனது பிள்ளைகளின் சமாதானம்
பெரிதாக இருக்கும்.
-ஏசாயா 54:13
positive bible quotes in tamil
நெடுங்காலம் காத்திருப்பது
இதயத்தை மிருதுவாக்கும்
ஆனால் விரும்பியது வரும் போது
ஜீவ விருட்சம் போல் இருக்கும்.
-நீதி 13:12
நீ தீமையினால் வெல்லப்படாமல்
தீமையை நன்மையால் வெல்லு.
-ரோமர் 12:21
நீங்கள் திடமானதாயிருந்து
காரியங்களை நடத்துங்கள்
உத்தமனுக்கு கர்த்தர்
துணை என்றான்.
-2 நாளாகமம் 19:11
நீ உயிரோடிருக்கும் நாள் எல்லாம்
ஒருவனும் உன் முன்பு
எதிர்த்து நிற்பதில்லைனு.
-யேசு யோசு 1:5
சர்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும்
சத்திருவினுடைய சகல வல்லமையையும்
மேற்கொள்ள உங்களுக்கு அதிகாரம்
கொடுக்கிறேன் உங்களை ஒன்றும்
சேதப்படுத்தமாட்டாது.
-லூக்கா 10:19
positive bible quotes in tamil
நான் உன் கூடவே இருக்கிறேன்
உனக்கு தீங்கு செய்யும் படி
யாரும் கை போடுவதில்லை
-அப்போ 18:10
பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா
பூரண சர்குணராயிருக்கிறது போல
நீங்களும் சர்குணராயிருக்கடவீர்கள்.
-மத்தேயு 5:48
நான் மோசேயோடு இருந்தது போல்
உன்னோடும் நான் இருப்பேன்
உன்னைவிட்டு நான் விலகுவதும் இல்லை
கைவிடுவதும் இல்லை.
-யோசுவோ 1:3
கர்த்தரின் கண்கள்
நீதிமான்கள் மேல் நோக்கி இருக்கிறது
அவருடைய செவிகள்
அவர்கள் கூப்பிடுதலுக்கு திறந்திருக்கிறது.
இதயத்தில் சுத்தமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்;
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.
-மத்தேயு 5:8
தேவன் உங்களை விசாரிக்கிறவர்
அதனால் உங்கள் கவலைகளை
எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
-பேதரு 5:7
ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்;
அவர் என் கால்களை
மான் கால்களை போல் ஆக்கி
உயரமான இடங்களில் நடக்க வைப்பார்.
-ஆபகூக் 3:19
சோதனைகளை சகித்து கொள்ளும்
மனிதன் பாக்கியவான்.
-யாக்கோபு 1:12
positive bible quotes in tamil
நல்ல மனிதரின் நடைகள்
கர்த்தரால் உறுதிப்படும்
அவனுடைய வலியின் மேல்
அவர் பிரியமாயிருக்கிறார்.
-சங்கீதம் 37:23
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2