சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16-ந் தேதி நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ந்தேதி திறக்கப்படுகிறது.

Update: 2023-11-06 17:03 GMT

சுவாமியே சரணம் ஐயப்பா.... சுவாமியே சரணம் ஐயப்பா  (கோப்பு படம்)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வௌயிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 17-ந் தேதி முதல் டிசம்பர் 27-ந் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். 27-ந் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 31-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 15-ந் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.

தொடர்ந்து 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20-ந் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.

Tags:    

Similar News