நமோ நாராயணா நாமம் சொல்லுங்க..! இறைவன் உங்களைத்தேடி வருவார்..!
OM Namo Narayana Tamil-இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதன் மூலம் நம் குழந்தைகள் நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்வார்கள்.;
OM Namo Narayana Tamil
இன்றைய இயந்திர உலகத்தில் சற்று நேரம் அமர்ந்து இறைவனை தியானிப்பது இயலாத காரியமாக உள்ளது. ஆனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இறைவனின் நாமத்தை உச்சரிப்பது சிறப்பைத்தரும். அவ்வாறு உச்சரிக்கும் போது இறைவனின் திருவுருவத்தை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை பக்த பிரஹலாதன் மற்றும் ஆண்டாளின் கதைகள் தெளிவாக விளக்குகின்றன.
நாகரீக வளர்ச்சி, பண்பாடுகளை மாற்றிவிட்டன. நமது கலாசாரங்கள் மறந்துபோன பழைய கதைகள் ஆகிப்போயின. நம்மவர்கள்.. பயன்படுத்தும் ஓ..காட்..ஓ மை காட்.. ஐயோ.. போன்ற வார்த்தைகளுக்கு பதிலாக நாராயணா.. சிவசிவ.. பிள்ளையாரப்பா.. முருகா.. போன்ற இறைவனின் திருநாமங்களை குழந்தைகளுக்கு பழக்கலாம். நம் குழந்தைகளும் ஒரு பிரஹலாதனாகவும்,ஒரு ஆண்டாளாகவும் மாற்ற முயற்சி செய்யலாம்.
இந்த சமூகத்தில் ஒழுக்கம்,பண்பாடு, நல்ல பழக்க வழக்கங்கள் கொண்ட குழந்தைகளாக சமூக அக்கறை கொண்டவர்களாக வளர்வார்கள்.
இறைவனின் நாமங்களில் நாராயண நாமமாகிய அஷ்டாக்ஷரத்தை பக்தியுடன் சொல்வதன் மூலம் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு பகவானை எளிதாகச் சென்றடையலாம் என்று ஸ்ரீ ராமானுஜர் நமக்கெல்லாம் சொல்லிவைத்துள்ளார்.
ஓம் நமோ நாராயணாய மந்திரம்
பெருமாள் 108 போற்றி
ஓம் ஹரி ஹரி போற்றி
ஓம் ஸ்ரீஹரி போற்றி
ஓம் நர ஹரி போற்றி
ஓம் முர ஹரி போற்றி
ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
ஓம் அம்புஜாஷா போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் உச்சிதா போற்றி
ஓம் பஞ்சாயுதா போற்றி
ஓம் பாண்டவர் தூதா போற்றி
ஓம் லட்சுமி சமேதா போற்றி
ஓம் லீலா விநோதா போற்றி
ஓம் கமல பாதா போற்றி
ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
ஓம் அநாத ரக்ஷகா போற்றி
ஓம் அகிலாண்டகோடி போற்றி
ஓம் பரமானந்தா போற்றி
ஓம் முகுந்தா போற்றி
ஓம் வைகுந்தா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி
ஓம் பச்சை வண்ணா போற்றி
ஓம் கார்வண்ணா போற்றி
ஓம் பன்னகசயனா போற்றி
ஓம் கமலக்கண்ணா போற்றி
ஓம் ஜனார்த்தனா போற்றி
ஓம் கருடவாகனா போற்றி
ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் சேஷசயனா போற்றி
ஓம் நாராயணா போற்றி
ஓம் பிரம்ம பாராயணா போற்றி
ஓம் வாமனா போற்றி
ஓம் நந்த நந்தனா போற்றி
ஓம் மதுசூதனா போற்றி
ஓம் பரிபூரணா போற்றி
ஓம் சர்வ காரணா போற்றி
ஓம் வெங்கட ரமணா போற்றி
ஓம் சங்கட ஹரனா போற்றி
ஓம் ஸ்ரீதரா போற்றி
ஓம் துளசிதரா போற்றி
ஓம் தாமோதரா போற்றி
ஓம் பீதாம்பரா போற்றி
ஓம் பலபத்ரா போற்றி
ஓம் பரமதயா பரா போற்றி
ஓம் சீதா மனோகரா போற்றி
ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
ஓம் பரமேஸ்வரா போற்றி
ஓம் சங்கு சக்கரா போற்றி
ஓம் சர்வேஸ்வரா போற்றி
ஓம் கருணாகரா போற்றி
ஓம் ராதா மனோகரா போற்றி
ஓம் ஸ்ரீரங்கா போற்றி
ஓம் ஹரிரங்கா போற்றி
ஓம் பாண்டுரங்கா போற்றி
ஓம் லோகநாயகா போற்றி
ஓம் பத்மநாபா போற்றி
ஓம் திவ்ய சொரூபா போற்றி
ஓம் புண்ய புருஷா போற்றி
ஓம் புரு÷ஷாத்தமா போற்றி
ஓம் ஸ்ரீ ராமா போற்றி
ஓம் ஹரிராமா போற்றி
ஓம் பலராமா போற்றி
ஓம் பரந்தாமா போற்றி
ஓம் நரஸிம்ஹா போற்றி
ஓம் திரிவிக்ரமா போற்றி
ஓம் பரசுராமா போற்றி
ஓம் சகஸ்ரநாமா போற்றி
ஓம் பக்தவத்சலா போற்றி
ஓம் பரமதயாளா போற்றி
ஓம் தேவானுகூலா போற்றி
ஓம் ஆதிமூலா போற்றி
ஓம் ஸ்ரீ லோலா போற்றி
ஓம் வேணுகோபாலா போற்றி
ஓம் மாதவா போற்றி
ஓம் யாதவா போற்றி
ஓம் ராகவா போற்றி
ஓம் கேசவா போற்றி
ஓம் வாசுதேவா போற்றி
ஓம் தேவதேவா போற்றி
ஓம் ஆதிதேவா போற்றி
ஓம் ஆபத் பாந்தவா போற்றி
ஓம் மகானுபாவா போற்றி
ஓம் வசுதேவ தனயா போற்றி
ஓம் தசரத தனயா போற்றி
ஓம் மாயாவிலாசா போற்றி
ஓம் வைகுண்டவாசா போற்றி
ஓம் சுயம்பிரகாசா போற்றி
ஓம் வெங்கடேசா போற்றி
ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
ஓம் சித்தி விலாசா போற்றி
ஓம் கஜபதி போற்றி
ஓம் ரகுபதி போற்றி
ஓம் சீதாபதி போற்றி
ஓம் வெங்கடாசலபதி போற்றி
ஓம் ஆயாமாயா போற்றி
ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
ஓம் உலகமுண்டவாயா போற்றி
ஓம் நானாஉபாயா போற்றி
ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
ஓம் சதுர்புஜா போற்றி
ஓம் கருடத்துவஜா போற்றி
ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
ஓம் புண்டரீகவரதா போற்றி
ஓம் விஷ்ணு போற்றி
ஓம் பகவானே போற்றி
ஓம் பரமதயாளா போற்றி
ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2