ஆன்மீகத்தில் செய்யக்கூடாதது

ஆன்மீகத்தில் இவையெல்லாம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதை பின்பற்றி நன்மை அடைவோம்.;

Update: 2021-06-18 01:03 GMT

ஒளி விளக்கு 

ஆன்மீகத்தில் செய்யக்கூடாதது

பலவிதமான எண்ணெய்களின் கலவையைக் கொண்டு ஸ்வாமி சந்நிதியில் விளக்கேற்றக் கூடாது. நல்லெண்ணெய், நெய் விளக்காக இருந்தாலும், தனித்தனியாகவே ஏற்றப்பட வேண்டும்.

இரண்டாக உடைந்த தேங்காயை மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.. அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உடைந்திருந்தால், அதை நிவேதனம் செய்யக்கூடாது.

ஏற்கனவே ஒருபடத்தின்/விக்ரஹத்தின் மீது சாற்றப்பட்ட புஷ்பத்தை, வேறு ஒரு படத்திற்கோ விக்ரஹத்திற்கோ சாற்றக்கூடாது.

காய்ச்சிய பாலினால் அபிஷேகம் செய்யக் கூடாது.

புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட உணவு வகைகளை நிவேதனம் செய்யக் கூடாது. (ஆவுடையார்கோவில் விலக்கு)

கிணற்றிலிருந்தோ, குழாயிலிருந்தோ அபிஷேகத்துக்கான நீரைக் கொண்டு வரும்போது, இடது கையில் சுமந்துவரக் கூடாது.

பொட்டலத்தோடு பாக்கு வெற்றிலைகளை நிவேதனம் செய்யக்கூடாது.

நைவேத்தியத்திற்கு உபயோகிக்கின்ற பாக்கை அதன் உறையிலிருந்து வெளியே எடுத்தே நிவேதனம் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் தெற்கு திசை நோக்கி விளக்கு எரியக் கூடாது.

✡️செயற்கை புஷ்பங்களால் இறை விக்ரஹங்களை அலங்கரிக்கக் கூடாது.

அலங்கார மின்விளக்குகளால் பூஜை அறையை அழகுபடுத்தும்போது, அவை தெய்வத் திருஉருவங்களைத் தீண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தமக்காகவோ, அடுத்தவருக்காகவோ ஆன்மீகச் சடங்குகளைச் செய்யும்போது, திருமணமானவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டே செய்ய வேண்டும்.

பிளாஸ்டிக்கினால் ஆன பாய் மற்றும் ஆசனங்களில் அமர்ந்துகொண்டு ஜபம், ஹோமம் இவற்றைச் செய்யக் கூடாது.

வேப்பெண்ணெய் கலவையைக் கொண்டு வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கெரிக்கக் கூடாது.

மாலையாகத் தொடுக்கப்பட்ட பிறகு, அவற்றிலிருந்து பூக்களைப் பிரித்தெடுத்து (பிய்த்தெடுத்து) அர்ச்சனை செய்யக் கூடாது.

அர்ச்சனை செய்யப்பட்ட புஷ்பங்களை காலினால் மிதிக்கக் கூடாது..

Tags:    

Similar News