2029ம் ஆண்டு வரை மோடியை அசைக்க முடியாது..! ஜாதகம் சொல்லுது..!
modi horoscope in tamil-பிரதமர் மோடியின் எந்த பலன் அவரை பிரதமர் வரையிலும் உயர்த்தியது. அவரது ஜாதக குறிப்பு என்ன சொல்கிறது?;
modi horoscope in tamil-பிரதமர் மோடி
modi horoscope in tamil-ஒருவர் நாட்டை ஆளும் வல்லமையுடன் அல்லது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற அளவிற்கு அரசு உயர்பதவிக்கு வரவேண்டுமெனில் சிம்மமும் சூரியனும் பலமுடன் இருக்க வேண்டும். சிம்மத்தின் சுபத்துவம் குறைந்திருக்கும் நிலையில் ராசி அல்லது லக்னத்தின் பத்தாமிடங்களோடு சூரியன் தொடர்பு கொண்டோ, சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களில் அல்லது லக்ன கேந்திரங்களில் அமர்ந்தோ இருக்க வேண்டும். இதுவே ஆளுவோருக்கான மிக முக்கியமான விதியாக இருக்கும்.
சிம்மம் அல்லது சூரியன் சுபத்துவம் அடையாத நிலையில் பிறந்த ஒருவர் நிச்சயமாக அரசியல்வாதியாகவோ, ஐஏஎஸ் போன்ற உயர் பதவிகளிலோ உட்கார முடியாது. ஜோதிடத்தில் தலைமைப் பண்பை உயர்த்திக்காட்ட, அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தலைவராக ஒருவரை மாற்றுகின்ற சக்தி சூரியனுக்கு மட்டுமே உண்டு. இதற்கு அடுத்த அதிகார உயர்நிலை கிரகம் செவ்வாய்.
சூரியனின் வீடான சிம்மம், சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களின் ஆளுமையில் இல்லாமல் இருந்து, ஒருவேளை அப்படி இருக்குமாயின் அந்த தசைகள் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே முடிந்து போகும். அவ்வாறு இளம் வயதிலேயே முடிந்து, சூரியன் மிக அதிகமான சுபத்துவ குணங்களோடு, சூட்சும வலுவோடு இருக்கும் ஒருவர் அதிகார பதவியில், ஆளுமைமிக்க உயர் நிலைக்குச் செல்வார்.
2029ம் ஆண்டுவரை மோடியை அசைக்க முடியாது
modi horoscope in tamil-புதஆதித்ய யோகம், நீச்ச பங்க ராஜயோகம், ருசக யோகம், கஜகேசரி யோகம் என்று ஏகப்பட்ட யோகங்கள் மோடியின் ஜாதகத்தில் வரிசை கட்டி வருகிறது. அதனால் மோடியை 2029 ம்ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருந்து அசைக்க முடியாது என்று அவருடைய ஜாதகம் கூறுகிறது.
மோடி ஜாதக அமைப்பு
சுக்ரன் 10ம் இடத்தில் இருப்பது பேரும் புகழை தந்திருக்க . அவனே 10க்கும் 10க்குரியோனாக இருப்பதும் பேரும் புகழும் மேலும் மேலும் பெருக காரணமாகிறது.
சனி 10ம் இடத்தில் இருந்திட 10க்குரியோன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. மேலும் 10க்கு 5க்குரியோன் பார்வை பெறுவது மேலும் சிறப்பு சேர்க்கிறது.
புதன் 10க்குரியோனுடன் சேர்ந்தும் ஆட்சி பெற்றும் உச்சம் பெற்றும் இருக்கிறது.
கேது 10க்குரியோனுடன் சேர்க்கை, ராகு 10க்குரியோனை பார்வை செய்கிறது.
குரு 10மிடத்தை பார்வை செய்கிறது.
செவ்வாய் 10ம் இடத்தை பார்க்கும் குருவை" பார்ப்பதுடன் 10க்கு 10ம் இடத்தையும் பார்க்கிறது. மேலும் செவ்வாய் ஆனது 10 க்கு 9க்குரியோனும் ஆனது இன்னும் சிறப்பம்சம் ஆகும்.
சந்திரன் 10க்கு 10மிடத்தை பார்வை செய்கிறது.
எனவே, அவர் அரசியலில் மக்களிடம் பெயரும் புகழும் பெற்றார். நவக்கிரஹ அம்ங்களும் அவர் புகழ் பெறக் காரணமாகியது.
சந்திர மங்கள யோகம், கஜகேசரியோகம்,புதஆதித்ய யோகம் ( சிறந்த கல்வி, புத்திசாலித்தனம், விவேகம், சிறப்பான பேச்சாற்றல் ஆகிய யோகங்களை தந்தது)
நீசபங்க ராஜ யோகம் சந்திரன் தரும் யோகமாகும்.
பஞ்சானன் யோகம். அல்லது பஞ்ச அனான யோகம் என்பது (5 கட்டங்களில் எல்லா கிரகங்களும் இருப்பது). இந்த யோகம் இருந்தால் ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, வாழ்க்கையில் உயர்ந்த நிலை ஆகியன தரும் யோகமாக இருக்கும். அதுவும் இவருக்கு 1,4,5,10,11 என்ற வீடுகளில் இருப்பது மிகச் சிறப்பான யோகமாகும்.
ஊச்சக யோகம் லக்னாதிபதியான செவ்வாய் ஜாகத்தில் லக்னத்தில் ஆட்சி செய்வதால், பஞ்சமகா புருஷ யோகம்சத்தில் ஒரு யோகமான ஊச்சக யோகம் இருக்கிறது.
சண்டாள யோகம், மோடியின் ஜாதகத்தில் 10–ம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இதற்கு ''சண்டாள யோகம்'' என்று பெயர். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது.
7ம் இடத்துக்கு அதிபதி சுக்ரனுடன் சனி சேர்ந்த காரணத்தாலும், 7ம் இடத்தை சனி பார்க்கின்ற காரணத்தாலும் உழைக்கும் மக்களின் முன்னேற்றதுக்கு உதவி செய்யவதில் ஆர்வம் பிறக்க காரணதாக்கியது. அதனாலேயே அவர் அரசியலில் கவனம் செலுத்த காரணமாகியது. 5க் உரியோன் 5க்கு 12ல் அமைந்தது, 5ல் ராகு இருப்பது. 9ம் இடத்து அதிபதி நீசம் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று இருப்பது ஆகிய அம்சங்கள் பிள்ளைகள் இல்லாத நிலையை தந்தது.