Memory Verse In Tamil-தேவனின் வாக்குத் தத்தங்களை நினைவிற் கொள்ளுங்கள்..!

கிறிஸ்துவின் புனித நூலான பைபிளில் இயேசு கிறிஸ்து கூறியுள்ள அற்புத கருத்துக்கள் உலகின் பொது மறையாக இருந்து வழிகாட்டி நிற்கிறது.

Update: 2023-10-15 06:34 GMT

Memory Verse In Tamil-பைபிள் வசனங்கள் (கோப்பு படம்)

Memory Verse In Tamil

வேதாகமத்தில் வாக்குத்தத்தம் ஒவ்வொன்றும் நம் சிந்தைக்கு இலவசமாய் தந்துள்ள அறிவுஜீவனாகும். அது விண்ணில் இருக்கும் தேவனாலே கொடுக்கப்பட்டுள்ளது. அது நம்மை அவர் நியமித்த இலக்கிற்கு அழைத்துச் செல்லும். 

Memory Verse In Tamil

இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் விசேஷமானவைகள். அவைகளை சத்தமாய் ஒவ்வொருநாளும் தேவன் முன்னிலையிலே அறிக்கை செய்து தேவன் உங்களுக்கு என்று நியமித்திற்கும் ஆசீர்வாதங்களை பெற்று உங்களை நீங்கள் சுத்தரித்துக் கொள்ளுங்கள்.


இதோ தேவனின் வாக்குத்தத்தங்கள் உங்களுக்காக..

சிறுமை பட்டவனுக்கு

கர்த்தர் அடைக்கலமானவர்

கஷ்டப்படுகின்ற காலங்களில்

அவரே தஞ்சமானவர். -சங்கீதம் 9:9

உன் பிள்ளைகள் எல்லோரும்

கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்

உனது பிள்ளைகளின் சமாதானம்

பெரிதாக இருக்கும். -ஏசாயா 54:13

நீ தீமையினால் வெல்லப்படாமல்

தீமையை நன்மையால் வெல்லு. -ரோமர் 12:21

நீ உயிரோடிருக்கும் நாள் எல்லாம்

ஒருவனும் உன் முன்பு

எதிர்த்து நிற்பதில்லைனு. -யேசு யோசு 1:5


நான் உன் கூடவே இருக்கிறேன்

உனக்கு தீங்கு செய்யும் படி

யாரும் கை போடுவதில்லை -அப்போ 18:10

Memory Verse In Tamil

நான் மோசேயோடு இருந்தது போல்

உன்னோடும் நான் இருப்பேன்

உன்னைவிட்டு நான் விலகுவதும் இல்லை

கைவிடுவதும் இல்லை. -யோசுவோ 1:3

ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்;

அவர் என் கால்களை

மான் கால்களை போல் ஆக்கி

உயரமான இடங்களில் நடக்க வைப்பார். -ஆபகூக் 3:19

நல்ல மனிதரின் நடைகள்

கர்த்தரால் உறுதிப்படும்

அவனுடைய வலியின் மேல்

அவர் பிரியமாயிருக்கிறார். -சங்கீதம் 37:23

கஷ்டத்திலே நீ கூப்பிட்டாய்

நான் உன்னை தப்புவித்தேன். -சங்கீதம் 81:7

Memory Verse In Tamil

சோதனைகளை சகித்து கொள்ளும்

மனிதன் பாக்கியவான். -யாக்கோபு 1:12


தேவன் உங்களை விசாரிக்கிறவர்

அதனால் உங்கள் கவலைகளை

எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். -பேதரு 5:7

கர்த்தரின் கண்கள்

நீதிமான்கள் மேல் நோக்கி இருக்கிறது

அவருடைய செவிகள்

அவர்கள் கூப்பிடுதலுக்கு திறந்திருக்கிறது.

இதயத்தில் சுத்தமுள்ளவர்கள்

பாக்கியவான்கள்;

அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். -மத்தேயு 5:8

Memory Verse In Tamil

பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா

பூரண சர்குணராயிருக்கிறது போல

நீங்களும் சர்குணராயிருக்கடவீர்கள். -மத்தேயு 5:48


சர்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும்

சத்திருவினுடைய சகல வல்லமையையும்

மேற்கொள்ள உங்களுக்கு அதிகாரம்

கொடுக்கிறேன் உங்களை ஒன்றும்

சேதப்படுத்தமாட்டாது. -லூக்கா 10:19

நீங்கள் திடமானதாயிருந்து

காரியங்களை நடத்துங்கள்

உத்தமனுக்கு கர்த்தர்

துணை என்றான். -2 நாளாகமம் 19:11

நெடுங்காலம் காத்திருப்பது

இதயத்தை மிருதுவாக்கும்

ஆனால் விரும்பியது வரும் போது

ஜீவ விருட்சம் போல் இருக்கும். -நீதி 13:12


Memory Verse In Tamil

அவர் ஒளியில் இருப்பது போல

நாமும் ஒளியிலே இருந்தால்

ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.

அவரின் மகன் இயேசுவின் ரத்தம்

சகல பாவங்களையும் நீக்கி

நம்மை காக்கும். -யோவான் 1:7

நிச்சயமாக நான் உன்னை

ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து,

உன்னைப்பெருகவே

பெருகப்பண்ணுவேன் என்றார் – எபிரேயர் 6:14

நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து,

அவரை நம்புவான்;

செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும்

மேன்மைபாராட்டுவார்கள். – சங்கீதம் 64:10

Memory Verse In Tamil

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு

நித்திரை செய்வேன்; கர்த்தாவே,

நீர் ஒருவரே என்னை

சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர். – சங்கீதம் 4:8


தேவனே, உமது நாமத்தினிமித்தம்

என்னை இரட்சித்து,

உமது வல்லமையினால்

எனக்கு நியாயஞ்செய்யும். – சங்கீதம் 54:1

ஜீவனைப்பார்க்கிலும்

உமது கிருபை நல்லது;

என் உதடுகள்

உம்மைத் துதிக்கும். – சங்கீதம் 63:3

Memory Verse In Tamil

ஆதலால், அவர்தாமே

சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே,

அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு

உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். – எபிரேயர் 2:18

பக்தியுள்ளவனைக் கர்த்தர்

தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று

அறியுங்கள்;

நான் கர்த்தரை நோக்கிக்கூப்பிடுகையில்

அவர் கேட்பார். – சங்கீதம் 4:3


கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை

அஸ்திபாரப்படுத்தினீர்;

வானங்களும் உம்முடைய கரத்தின்

கிரியைகளாயிருக்கிறது; – எபிரேயர் 1:10

Memory Verse In Tamil

எனக்காக யாவையும் செய்து

முடிக்கப்போகிற தேவனாகிய

உன்னதமான தேவனை

நோக்கிக் கூப்பிடுவேன். – சங்கீதம் 57:2

ஜனங்களே, எக்காலத்திலும்

அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில்

உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்;

தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். – சங்கீதம் 62:8

நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை

முடிவுபரியந்தம்

உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில்,

கிறிஸ்துவினிடத்தில்

பங்குள்ளவர்களாயிருப்போம். – எபிரேயர் 3:14

என் தேவனே, என் சத்துருக்களுக்கு

என்னைத் தப்புவியும்;

என்மேல் எழும்புகிறவர்களுக்கு

என்னை விலக்கி

உயர்ந்த அடைக்கலத்திலே வையும். – சங்கீதம் 59:1

Memory Verse In Tamil

என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து

பற்றிக்கொண்டிருக்கிறது;

உமது வலதுகரம்

என்னைத் தாங்குகிறது. – சங்கீதம் 63:8


நான் உம்மை நோக்கிக்

கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள்

பின்னிட்டுத் திரும்புவார்கள்; – சங்கீதம் 56:9a

உமது கிருபை வானபரியந்தமும்,

உமது சத்தியம்

மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. – சங்கீதம் 57:10

என் அக்கிரமம் நீங்க

என்னை முற்றிலும் கழுவி,

என் பாவமற

என்னைச் சுத்திகரியும். – சங்கீதம் 51:2

Memory Verse In Tamil

தேவனே, என் விண்ணப்பத்தைக்கேட்டு,

என் வாயின் வார்த்தைகளுக்குச்

செவிகொடும். – சங்கீதம் 54:2


உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, 

உன் சந்திரன் மறைவதுமில்லை;

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்;

உன் துக்கநாட்கள் முடிந்துபோம். -ஏசாயா 60:20

கர்த்தர் உன் ஆக்கினைகளை

அகற்றி, உன் சத்துருக்களை

விலக்கினார்;

இஸ்ரவேலின் ராஜாவாகிய

கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்;

இனித் தீங்கைக் காணாதிருப்பாய். -செப்பனியா 3:15

தேவனே, சுத்த இருதயத்தை

என்னிலே சிருஷ்டியும்,

நிலைவரமான ஆவியை

என் உள்ளத்திலே புதுப்பியும். – சங்கீதம் 51:10


கர்த்தர் மேல் உன் பாரத்தை

வைத்துவிடு,

அவர் உன்னை ஆதரிப்பார்;

நீதிமானை ஒருபோதும்

தள்ளாடவொட்டார். – சங்கீதம் 55:22

அவரே என் கன்மலையும்,

என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;

நான் அதிகமாய்

அசைக்கப்படுவதில்லை. – சங்கீதம் 62:2

எனக்கு நெருக்கமுண்டான நாளிலே

நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த

அடைக்கலமுமானீர். – சங்கீதம் 59:16b

தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர்,

எங்களைச் சிதறடித்தீர்,

எங்கள் மேல் கோபமாயிருந்தீர்;

மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும். – சங்கீதம் 60:1


அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி,

என்னை விடுவித்தார்;

என் கண் என் சத்துருக்களில்

நீதி சரிக்கட்டுதலைக் கண்டது. – சங்கீதம் 54:௭ 

Tags:    

Similar News