சத்திரவெள்ளாலபட்டி விநாயகர், காளியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை வழிபாடு

கருவறையில் அமைந்துள்ள விநாயகர், காளியம்மன், முத்துராமலிங்கம்தேவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது;

Update: 2023-06-21 08:30 GMT

சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் விநாயகர், காளியம்மன் முத்துராமலிங்கம் தேவர் சுவாமிகள் திருக்கோவிலில் நடைபெற்ற  48வது நாள் மண்டல பூஜை

சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் விநாயகர், காளியம்மன் முத்துராமலிங்கம் தேவர் சுவாமிகள் திருக்கோவில் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர், காளியம்மன், முத்துராமலிங்கம்தேவர் சுவாமிகள் திருக்கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.

முன்னதாக, நேற்று கோவில் வளாகப் பகுதியில் சிவாச்சாரியார்கள் வேள்வி யாகபூஜை மற்றும் கால யாக பூஜையுடன் கணபதி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், விநாயகர் பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பூஜைகளும் பசுவிற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனைகளும் நடைபெற்றன.

சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோவிலை சுற்றி வலம் வந்து பின் கருவறையில் அமைந்துள்ள விநாயகர், காளியம்மன், முத்துராமலிங்கம்தேவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு 48 வது நாள் மண்டல பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாதாரணை காண்பிக்கப்பட்டது பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, சத்திர வெள்ளாளபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்..

Tags:    

Similar News