வாழும் போதே பேரமைதி கிடைக்குமா? பதில் சொல்கிறார் ஸ்ரீ ரமணபகவான்
பேரமைதி கிடைக்குமா? என்பது குறித்து ஸ்ரீரமண பகவான் கூறியதை படியுங்க...
ரமண மகரிஷி உபதேசித்தபடி ஆன்ம சாதனையில் ஈடுபடும் போது பக்தர்கள் ஆழ்ந்த பேரமைதியை உணர்கிறார்கள். அப்படி அனுபவித்து உணர்ந்த பேரமைதியை மீண்டும் குடும்பம் மற்றும் உலகாயத விஷயங்களில் ஈடுபட்டு, அதை (பேரமைதியை) இழக்க விரும்பாத ஒரு பக்தர் இவ்வாறு பகவானிடம் வினவினார்.
உலக விஷயங்களில் இருக்கும்போதே சமாதி (பேரமைதி) சுகம் அனுபவிப்பது சாத்தியமா?
‘‘நான் வேலை செய்கிறேன்” என்ற உணர்ச்சியே தடை. வேலை செய்வது யார்?” என்று விசாரித்து, உன் உண்மை சொரூபத்தை நினைவில் கொள். வேலை செய்யவோ, துறக்கவோ முயல வேண்டாம். உன் முயற்சியே பந்தம். விதிக்கப்பட்டது நடந்தே தீரும்.
வேலையை விதிக்கப்படாதிருந்தால் நீ தேடினாலும் அது உனக்குக் கிட்டாது. வேலையே விதித்திருந்தால் நீ அதை விட்டு அகல முடியாது. உன்னைக் கட்டாயமாக வேலை வாங்கி விடும். ஆகையால் அதையெல்லாம் பரமேச்வரனிடம் விட்டு விடு. உன்னிஷ்டப்படி நீ துறக்கவோ வேலை செய்யவோ முடியாது.
தகவல்: மகரிஷி வாய்மொழி நூலிலிருந்து….