இடது கண் துடிக்குதா..? அப்ப இதுதான் பலன்..! என்னன்னு பாருங்க..?!

Left Eye Blinking For Female Meaning-'கண்கள் துடிப்பது' என்பது காலம் காலமாக வாழ்க்கையில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. என்னங்க.. கண் துடிப்பதில் இவ்வளவு விஷயம் உள்ளதா? வாங்க தெரிஞ்சுக்குவோம்.;

Update: 2022-11-19 05:16 GMT

Left Eye Blinking For Female Meaning-பொதுவாகவே நம்பிக்கை என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிமுக்கிய சக்தியாக இருக்கிறது. அந்த நம்பிக்கையை சிலர் மூட நம்பிக்கை என்று சொன்னாலும் கூட மனதில் ஏற்படும் தன்னம்பிக்கை அது மூடநம்பிக்கையாக இருந்தாலும் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் ஆயின் அதை நாம் வரவேற்கத்தானே வேண்டும். அந்த நம்பிக்கையே காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு செயல் வடிவில்.

அப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக பூனை குறுக்கே போனால் நல்லதல்ல. இடது கண் துடித்தால் நல்லதல்ல, என்னது பல்லி தலையில் விழுந்திடிச்சா..இப்படி பல விஷயங்கள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் நாம் இங்கு  பார்க்கப்போவது பெண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன எதிர்வினைகள் நடக்கும் என்பதுதான். அதுவே ஆண்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப்பற்றி பார்ப்போம்..வாங்க..!

இதற்கு புராணங்களில் இருந்து சில சான்றுகளையும் பார்ப்போம். இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம். அதாவது பெண்களுக்கு நல்லது நடக்கும். ஆனால் அதேவேளையில் ஆண்களுக்கு நல்லதல்ல என்பதை ராமாயணம் தெளிவாக நமக்கு விளக்கிச்சொல்கிறது.

அதை விளக்குவதற்குத்தான் இந்த கதை..வாங்க பார்ப்போம்..!

ராமனும், சுக்ரீவனும் சிறந்த நண்பர்களாக ஆகிவிட்டனர். அவர்களின் நட்பு பிறருக்கு எடுத்துக்காட்டும்படியாக அமைந்தது. அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக அதை உறுதிப்படுத்தும் விதமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். அவ்வாறு அக்னியை வலம் வரும்போது, "ராமா, நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், இன்பமாக இருப்பினும், துன்பமாக இருப்பினும் அது நம் இரண்டு பேருக்கும் உரியதாகும்." என்றான் சுக்ரீவன்.

ராமனும் சுக்ரீவன் வார்த்தைகளில் மகிழ்ந்து சுக்ரீவன் கூறிய அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். இந்த வார்த்தைகளை உதிர்த்த அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூன்று பேருக்கு இடதுகண்கள் துடித்தன. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதைக்கு. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. ஆகவே சீதை இலங்கையில் ராவணன் பிடியில் இருந்த விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது.

அதே போல அடுத்த இரண்டு பேரில் வாலிக்கும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெடுபலனை உண்டாக்கும் என்பது நம்பிக்கை. ஆகவே அந்த கணமே அவர்களின் அழிவுக்கான நேரமும் குறிக்கப்பட்டு விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது அழிவுகாலம் நெருங்கி விட்டது என்பதை உணர்த்தும் செயல்தான் கண் துடிப்பது.

இந்த அடிப்படையிலேயே இன்றளவும் கண்கள் துடிப்பதை வைத்து பலர் அவர்களின் அனுபவ அறிவைக்கொண்டு சில கருத்துகளை கூறுகிறார்கள். சிலருக்கு அந்த கண்கள் துடிப்பதன்மூலம் கூறப்படும் கருத்துகள் சரியானதாகவும் அமைகின்றன. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News