நல்ல வேலை கிடைக்கணுமா..? அப்ப இந்த கோயிலுக்கு போய்ட்டுவாங்க..!
நல்ல வேலை இருந்தால் மட்டுமே இன்றைய இளைஞர்களை பெண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதனால வேலை முக்கியமுங்கோ.
Jambukeswarar Temple, Thiruvallikeni Parthasarathi Temple, Kumabakonam Sri Adhi Kumbeswarar Temple,Thanjavur Thiruvelliyangudi Temple,Job Seekers' God in Tamil
போட்டிமிகுந்த இந்த காலத்தில் எவ்வளவு படித்து இருந்தாலும் நல்ல வேலை கிடைப்பது (மனதில் கொள்ளுங்கள் நல்ல வேலை) ஒரு சிலருக்கு மட்டுமே அமைகிறது. அதற்கு 2 காரணங்களை நாம் சொல்லலாம். ஒன்று நன்றாக திறமையுடன் படிப்பது. இன்னொன்று நம்பிக்கை. அந்த நம்பிக்கை இறைபக்தியினால் வருவது.
Job Seekers' God in Tamil
அப்ப நல்ல வேலை கிடைக்க இந்த கோயில்களுக்குச் சென்று வாருங்கள். இந்த தரிசனம் உங்களுக்கு மேலும் நம்பிக்கையை ஆழப்படுத்தி உங்கள் திறமைகளை முழுவதுமாக வெளிப்படுத்தும் திறன் வளரும். என்றால் உங்களுக்கு நல்ல வேலை கிடைப்பதில் தடை இருக்காதுதானே..?
உதாரணத்துக்கு ஒரு வங்கித்தேர்வு அல்லது TNPSC தேர்வு எழுதுகிறீர்கள் என்றால், அதில் வெற்றி பெற நீங்கள் முயற்சி எடுத்து படித்ததும், தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கி கொஞ்சம் உங்களிடம் இருக்கும் நம்பிக்கையுடன் இறைவனிடம் இருந்து கொஞ்சம் நம்பிக்கையை ரீசார்ஜ் செய்து வந்திருப்பீர்கள்.
Job Seekers' God in Tamil
அந்த இரண்டும் சேர்ந்து ஒரு புதிய வெளிச்சத்தை மனதுக்குள் கொண்டுவந்திருக்கும். அந்த உற்சாகத்துடன் எழுதுவீர்கள். வினாக்களுக்கான பதில்கள் எல்லாம் டக்கு டக்குன்னு வந்து கொட்டுகின்றன. முழு திருப்தியுடன் தேர்வு முடிகிறது. வெற்றிபெற்று வேலையும் கிடைக்கிறது.எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.
உங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள கீழே தரப்பட்டுள்ள கோயில்கள் ஏதாவது ஒன்றில் தரிசனம் செய்தால் நல்லவேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. நீங்களும் ஒரு முறை சென்று வாருங்களேன். ( நன்றாக கவனிங்க: படிப்பதும் முக்கியம்)
Job Seekers' God in Tamil
திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் கோயில்
சிவன் வடிவில் அம்பாள்; அம்பாள் வடிவில் சிவன்:
பிரம்மனுக்கு ஒரு விபரீத ஆசை வந்தது.அதாவது தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்” உண்டானது. என்னடாது வம்பா போச்சி என்று பிரம்மன் தோஷ நிவர்த்தி பெறுவதற்காக சிவனை வேண்டினார்.
உடனே பிரம்மனுக்கு அருள்புரிவதற்காக சிவன் கைலாயத்திலிருந்து புறப்பட்டார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினார். சிவன் அம்பிகையிடம்,, பிரம்மன் பெண்கள் மீது மோகம் கொள்பவர். அதனால் நீ வேண்டாம் என்று கூறி உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை ஒரு புது ஐடியா ஒன்றை கூறினார்.
அதாவது சிவன் அம்பிகை வேடத்திலும், அம்பிகை சிவன் வேடத்திலும் செல்லாம் என்றார். அதன்படி சிவன் சேலை அணிந்தும் அம்பிகை சிவன் வேடத்திலும் சென்றனர்.
Job Seekers' God in Tamil
சிவமும், சக்தியும் ஒன்றுதான் என்பதை அடிப்படையாகக்கொண்டு இந்த திருவிளையாடல் ஏற்பாடானது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர். இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.
மாணவி அம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் “அகிலாண்டேஸ்வரி” என்றழைக்கப்படுகிறாள்.
ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி வெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறார். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தார். எனவே மாணவர்கள் இத்தலத்திற்கு வந்து கல்விக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
Job Seekers' God in Tamil
அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம்.
நல்ல வேலை கிடைக்கணுமா..?
உங்களுக்கு வேலையில் மாற்றம் கிடைத்து அடுத்த நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும்
என்று எண்ணினால் உடனே, திருச்சி திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த கோயில் தண்ணீரைக் குறிக்கிறது. வேலை தேடுபவர்கள் அல்லது வேலை மாற நினைப்பவர்களுக்கு ஜம்புகேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டால், கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும், வேலை கிடைப்பதற்கும் இங்கு பூஜை செய்து வழிபட்டு நல்ல வேலை கிடைத்ததும், அவர்கள் மீண்டும் கோயிலுக்குச் சென்று சேலை அல்லது நன்கொடைகளை நன்றிக்காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
Job Seekers' God in Tamil
கும்பகோணம் ஆதி கேம்பேஸ்வரர்
ஆதி கும்பேஸ்வரர் கோயில் :
மங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரர் கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சைவ துறவிகளால் போற்றப்படும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமான் பார்வதி தேவிக்கு 36 கோடி மந்திரத்தின் சக்தியுடன் தனது வடிவத்தில் பாதியை வழங்கியதாக நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இது பார்வதி தேவியின் சக்தியை கூட்டி, மந்திர பீடேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார்.
சிறந்த தொழில் வாய்ப்புகள் அல்லது வேலை வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்கள், இந்தக் கோயிலுக்குச் சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்து மங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரரை வணங்குகிறார்கள். தாங்கள் நினைத்தது நிறைவேறியவுடன், ஆதி கும்பேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வஸ்திரம் அல்லது பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார்கள்.
Job Seekers' God in Tamil
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் மட்டுமே விஷ்ணு மீசையுடன் காட்சி தருகிறார். அதனால், இது மீசை பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி கோயில் , சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது.
யோக நரசிம்மர், ராமர், கஞ்சேந்திரவரதராஜா, ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய விஷ்ணுவின் ஐந்து அவதாரங்களையும் கொண்ட ஒரே கோயில் இதுமட்டுமே. யோக நரசிம்மர் கல்வி மற்றும் ஞானத்தை வழங்குவதாக அறியப்படுகிறது. சிறந்த வேலை வாய்ப்பு அல்லது தொழில் வளர்ச்சியை எதிர்நோக்கி இருப்பவர்கள் நரசிம்மரை திருமஞ்சனம் என்ற சடங்கு செய்து வழிபடுகின்றனர். யோக நரசிம்மருக்கு சக்கரைப் பொங்கல் வைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள்.
Job Seekers' God in Tamil
உயர் பதவி தரும் தேவலோக இந்திரன்
தேவலோகத்தின் இந்திரன் என்றும் அழைக்கப்படும் தேவேந்திரன் மகாபலி சக்ரவர்த்தியால் தோற்கடிக்கப்பட்டு தேவலோகத்தை இழந்தார். அவர் விஷ்ணுவை பிரார்த்தனை செய்ததால், விஷ்ணு மகாபலியை வென்று இந்திரனுக்கு நல்ல பதவியைக் கொடுத்தார்.
எனவே, இந்த கோயிலில் பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு இழந்த வேலை கூட மீண்டும் கிடைக்கும் என்றும், வேலையில்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், கருடாழ்வார் உத்யோக (எழும் நிலை) நிலையில் உள்ள ஒரே தலம் இதுவாகும். இங்குள்ள நான்கு கரங்களைக் கொண்ட கருடனை வழிபடுவது பக்தர்களுக்கு நிர்வாகத்தில் பதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
Job Seekers' God in Tamil
திருவெள்ளியங்குடி கோயில்
திருவெள்ளியங்குடி கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ திருத்தலமாகும். பல்லவர்களால் கட்டப்பட்ட ஏறக்குறைய 1400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் சாய்ந்த நிலையில் காணப்படும் புஜங்க ஷயனா தெய்வம் உள்ளது.
இது வைணவ மரபின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இந்திரன், மன்னன் மகாபலியுடன் நடந்த போரில் தோல்வியடைந்ததால் தனது இந்திரலோக ராஜ்யத்தை இழந்தார். அதற்காக அவர் விஷ்ணுவை நோக்கி பிரார்த்தனை செய்தார்.இந்திரனது பிரார்த்தனையின் விளைவாக மகாபலி, தேவலோகத்திலிருந்து தோற்கடிக்கப்பட்டு இந்திரலோகம் இந்திரனுக்கு திரும்பக் கிடைத்தது. இப்படி தோல்வியுற்றிருந்த இந்திரனின் நிலை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தப்பட்டதால், பக்தர்கள் இழந்த வேலைகளை மீண்டும் பெறவும், வேலை வாய்ப்பு பெறவும், தொழில் முன்னேற்றம் அடையவும் இந்த ஆலயத்துக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.