Jathagam Kattam from Date of Birth in Tamil-ராசி கட்டம் என்றால் என்ன?

ஒரு ஜாதகத்தின் ராசிக்கட்டத்தின் அமைப்பு எவ்வாறு இருக்கும்? அது எவ்வாறு அமைக்கப்படுகிறது போன்ற விபரங்களை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம் வாங்க.;

Update: 2023-12-04 09:54 GMT

Jathagam Kattam from Date of Birth in Tamil

ராசி என்பது வான் மண்டலத்தில் 360 டிகிரி கொண்ட ஒரு நீள்வட்ட வடிவ அமைப்பு ஆகும். இந்த 360 டிகிரி 12 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றது. வட்ட வடிவில் அமைப்பதை விட கட்டமாக அமைப்பதால் எளிதில் புரியும் என்பதால் அவை கட்டங்களாக உருவாக்கப்படுகின்றன.

அதனால் 12 கட்டங்களை அமைத்து ஜாதகக் கட்டம் அமைக்கப்படுகின்றது. இதனையே நாம் ராசிக் கட்டம் என்று கூறுகிறோம். இந்த பன்னிரண்டு கட்டங்களும் விலங்கு மற்றும் இன்ன பிற உருவ அமைப்பில் சித்தரிக்கப்படுகின்றன. இந்த பன்னிரண்டு கட்டங்களும் நிலையாக இருக்கின்றன.

Jathagam Kattam from Date of Birth in Tamil


இந்தக் கட்டங்களில் கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை சுற்றி வரும் வேகத்திற்கேற்ப, மாத கிரகங்கள், வருட கிரகங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த வீடுகள் ஒன்று முதல் பன்னிரண்டு எண்களில் குறிப்பிடப்படுகின்றன.

முதலாம் வீடு லக்னம் என்று அழைக்கப்படுகின்றது. கடிகாரச் சுற்று முறையில் இந்த எண்கள் ஏறுவரிசையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் கோள்கள் அல்லது கிரகங்கள் இருக்கும் தீர்க்காம்சத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவற்றிற்குரிய கட்டங்களில் நிரப்பப்படு கின்றன.

பிறப்பு ஜாதகம் மூலம் ஒருவர் பிறந்த நேரத்தில், ஜோதிடத்தில் கூறப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் நிலைகளை அறிய இயலும். ஜாதகம் என பிரபலமாக அறியப்படும்.

Jathagam Kattam from Date of Birth in Tamil

இது, ஒரு நபரின் பிறந்த இடம் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிரகங்களின் நிலைகளை குறிக்கின்றது. உங்கள் ஜாதகம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் கிரகங்களின் அமைப்பைக் குறிக்கின்றது. அந்த அமைப்பிற்கேற்ப நமது வாழ்க்கை நிகழ்வுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கின்றது.

ஒரு ஜாதகத்தை எப்படி படித்துப் பார்ப்பது ?

ஒருவரின் ஜாதகத்தினை சரியாக ஆராய்ந்து கணிப்பதன் மூலம் அந்த நபரைப் பற்றிய பெரும்பாலான விஷயங்களை நாம் அறிந்து கொள்ள இயலும். ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து கணிப்பது என்பது விரிவான செயல் முறை ஆகும். இங்கு நாம் ஓரு ஜாதகத்தை எவ்வாறு வரிசைக் கிரமப்படுத்தி படிப்பது அல்லது பார்ப்பது என்பதை சற்று சுருக்கமாகக் காண்போம்.

Jathagam Kattam from Date of Birth in Tamil

உங்கள் ஜாதகத்தில் “ல” அல்லது “லக்” என்று எழுதப்பட்டிருக்கும் வீடு தான் முதல் வீடு அல்லது லக்னம் என்று அழைக்கபடும். இங்கிருந்து தான் கடிகாரச் சுற்றில் ஏறு வரிசையில் வீடுகளை எண்ண வேண்டும்.

மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு சின்னம் இருக்கும். இந்த சின்னம் மற்றும் வீடுகளின் பெயர்கள் மாறாத , நிலையான ஒன்றாகும்.

கடிகாரச் சுற்று முறையில் எண்ணி, தீர்காம்சத்திற்கேற்ப சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுள் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த வீட்டில் உள்ளன என்று அறிந்து அமைக்க வேண்டும்.

Jathagam Kattam from Date of Birth in Tamil

இறுதியாக ஒன்பது கிரகங்களும் எந்தெந்த வீட்டில் உள்ளன என்பதை அறிய வேண்டும்.

இவை ஒரு ஜாதகத்தின் அடிப்படை விஷயங்கள் ஆகும். இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து உங்கள் ஜோதிட அறிவை பயன்படுத்தி நுணுக்கங்களை ஆராய்ந்து வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்குரிய பலன்களை கணித்து அளிக்க வேண்டும்.

உங்கள் சுய ஜாதகத்தை வைத்து முதலில் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் இந்த உலகத்துடனான உங்கள் தொடர்பை நீங்கள் அறிய முடியும். உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ளாத பல விஷயங்களை நீங்கள் உங்கள் ஜாதகத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Tags:    

Similar News