திருமணத்தில் கணப்பொருத்தம் எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சுக்கங்க..!

Gana Porutham Is Important Or Not-திருமண பொருத்தம் பார்ப்பதில் கணப்பொருத்தம் பார்ப்பது முக்கியமாக கருதப்படுகிறது.

Update: 2022-08-09 09:38 GMT

gana porutham meaning in tamil-திருமண பொருத்தம்.(மாதிரி படம்)

Gana Porutham Is Important Or Not-திருமண பொருத்தம் - கணப் பொருத்தம்

ஜோதிட சாஸ்திரத்தில் திருமண பொருத்ததில் மூன்று வகையான கணங்கள் உள்ளன.

அவை தேவ கணம், மனித கணம், ராட்ஷச கணம்.

அனைத்து நட்சத்திரங்களும் இந்த மூன்று கணங்களுக்குள் ஒன்றாகத் தான் இருக்கும், ஒருவர் மீது ஒருவர் சகிப்புத் தன்மை கொள்ளவே இந்த பொருத்தம் உள்ளது. இந்த பொருத்தம் இருப்பின் மற்றவர் மீது சகிப்புத்தன்மை ஏற்படும். இதனால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆக தினம் தினம் சண்டை, சச்சரவுகள் ஏற்படாது. கணம் என்பது குணத்தை வலியுறுத்தும் வார்த்தையாகும்.

1.தேவ கணம்

அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகியவை தேவ கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்.

2. மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை மனித கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்.

3. ராட்ஷச கணம்

கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகியவை ராட்ஷச கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்

ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே கணம் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்யலாம், அல்லது ஒருவர் தேவ கணம் மற்றொருவர் மனித கணம் என்றால் மணம் செய்யலாம்.

மணமகன் தேவ கணமாக இருந்து பெண் ராட்ஷச கணமாக இருந்தால் இந்த பொருத்தும் அவர்களுக்கு இல்லை, ஆனால் பெண் தேவ கணமாக இருந்து, ஆண் ராட்ஷச கணமாக இருந்தால் பொருத்தும் உண்டு. பெண்ணுக்கு ராட்ஷச கணமாக இருந்து ஆணின் நட்சத்திரம் 14 நட்சத்திரத்திற்கு பிறகு இருந்தாலும் பொருத்தம் உண்டு. இந்த பொருத்தம் இருந்தால் தான் இருவருக்கும் மண ஒற்றுமை ஏற்படும். இந்த பொருத்தம் இல்லாதவர்களுக்கு தின பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News