திருமணத்தில் கணப்பொருத்தம் இல்லைன்னா வீட்டில களேபரம்தான்..! தெரிஞ்சுக்கங்க..!

Ganam Porutham-திருமணத்தில் கணப்பொருத்தம் மிக முக்கியமானதுங்க. கணவனும்,மனைவியும் சந்தோஷமா வாழணுன்னா கணப்பொருத்தம் முக்கியம்.

Update: 2022-08-08 05:33 GMT

Ganam Porutham

Ganam Porutham

கணப்பொருத்தம் என்றால் என்ன?

திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது 10 முக்கிய பொருத்தங்களில் ஒன்றாக கண பொருத்தம் பார்க்கப் படுகிறது. இந்த பொருத்தம் தம்பதிகளின் குண ஒற்றுமைக்காக பார்க்கப்படுகிறது. கணப் பொருத்தம் மூன்று வகையாக வகுக்கப்பட்டுள்ளது. தேவகணம், மனித கணம், ராட்சச கணம் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது எவ்வாறு அதனை பயன்படுத்தி கணப்பொருத்தம் பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க.

கண பொருத்தம் பார்ப்பது எப்படி?

கணப் பொருத்தத்தில் 3 வகையான அமைப்புகள் உள்ளன. அவை தேவகணம், மனித கணம், ராட்சச கணம் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது.

அதன் பொருத்தம் விவரம் காண்போம் :

பொருந்தும் கணங்கள் 

  • பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக இருந்தால் நலம்.
  • பெண் மனித கணமும், மாப்பிள்ளை மனித கணமானால் நலம்.
  • பெண் தேவ கணமும், மாப்பிள்ளை தேவ கணமானால் நலம்.
  • பெண் ராட்சஸ கணமும், மாப்பிள்ளை ராட்சஸ கணமானால் நலம்.

மத்திமம், அதமம், பொருந்தா கணங்கள் 

  • பெண் தேவ கணமும், மாப்பிள்ளை மனித கணமானால் மத்திமம்.
  • பெண் தேவ கணமும், மாப்பிள்ளை ராட்சஷ கணமானால் அதமம்.
  • பெண் மனித கணமும், மாப்பிள்ளை ராட்சஷ கணமானால் அதமா அதமம் – பொருந்தவே பொருந்தாது.
  • பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

தேவ கணம், மனித கணம், ராட்சச கணம் நட்சத்திரங்கள் எவை எவை என்று பார்ப்போம்

தேவ கணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி

ராட்சஷ கணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News