Dog worshipped as a God -நாய்களுக்கு கோவில் கட்டி காவல் தெய்வங்களாக வழிபடும் கிராமம்..!
நாய்கள் நன்றியுள்ளவை என்பது நாம் அறிந்ததே. நாய்களை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருவதும் நாம் அறிந்ததே. ஆனால், நாய் கோவில் தெரியுமா?
Dog worshipped as a God
இந்தியாவில் பல விசித்திர வழிபாட்டு முறைகள் உள்ளன. அட ஆமாங்க. நடிகைக்கே கோவில் கட்டி தரிசனம் செய்த கதைகளையும் நம் காலத்தில் கேட்டுவிட்டோம். இந்தியாவில் கோவில்களே சிறந்த கட்டிடக்கலையை போற்றும் அடையாளங்களாக உள்ளன. இயற்கையை வணங்கும் இந்திய தேசத்தில் உயிரினங்களை வணங்கும் பண்பாடும் உள்ளன என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
உதாரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை குழந்தைகள் போல வளர்ப்பார்கள். அவைகள் இறக்க நேர்ந்தால் அவைகளை சிலைசெய்து தெய்வமாக வழிபடுகின்றனர்.
அதைப்போல ஒரு கோவில்தான் நாய்களுக்கான கோவில். ஆமாங்க..கர்நாடக மாநிலம், சென்னபட்னாவில் நோய்களுக்காக ஒரு கோவில் உள்ளது.
கர்நாடகா மாநிலம், சென்னபட்னா நகர் அருகே அக்ரஹார வலகெரேஹள்ளி என்ற சிறிய கிராமம் உள்ளது. சென்னபட்னா நகரம் மரத்தால் செய்யப்படும் பொம்மைகளுக்கு உலகளவில் புகழ்பெற்றது. இதன் அடையாளமாக 'பொம்மைகளின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. யுனெஸ்கோ பாரம்பரிய பொருள்களில் ஒன்றாக இந்த மர பொம்மைகள் உள்ளன.
Dog worshipped as a God
பெங்களூரு நகரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அக்ரஹார வலகெரேஹள்ளி நாய்களுக்கு கோவில் கட்டி அதை காவல் தெய்வங்களாக வழிபடுவது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாய் கோவில் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.
இந்த கிராமத்தின் முக்கிய தெய்வமான கெம்பம்மா தேவிக்கு இந்த கிராமத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அவர் தான் அந்த ஊரைக் காக்கும் தெய்வமாக வணங்கப்பட்டு வந்துள்ளார்.
மாயமான நாய்கள்
ஒருமுறை இரண்டு நாய்கள் திடீரென கிராமத்தில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போய்விட்டன. சில நாட்களுக்குப் பிறகு, கெம்பம்மா தேவி அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது கனவில் தோன்றி, கிராமத்தையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் வகையில் தனக்கு அருகில் காணாமல் போன நாய்களுக்கு ஒரு கோவில் கட்டும்படி கூறியுள்ளார். கெம்பம்மா தேவிக்கு கோவில் கட்டிய ரமேஷ் என்ற தொழில் அதிபரே 2010ம் ஆண்டில் காணாமல் போன இரண்டு நாய்களுக்கும் கோவில் கட்டிறுள்ளார். காணாமல் போன அந்த நாய்களைப்போலவே 2 சிலைகளை செய்து ஒரு சிறிய கோவிலைக் காட்டியுள்ளார்.
Dog worshipped as a God
அன்றில் இருந்து காணாமல் போன 2 நாய்கள் அந்த கிராமத்தின் காவல் தெய்வங்களாக மாறிவிட்டன. கெம்பம்மா தேவிக்கு செய்யப்படும் பூஜைகள் அனைத்தும், அந்த இரண்டு நாய்களின் சிலைகளுக்கும் செய்யப்படுகிறது. அதோடு நாய்களை செல்லப்பிராணிகளாக விரும்பி வளர்ப்பவர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
பெரிய திருவிழா
மேலும் இந்த காவல் நாய்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் கிராமத்தில் பெரிய திருவிழா எடுக்கிறார்கள். இந்த நாய் கோவிலின் புகழ் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தைத் தாண்டி பிற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. அதனால், தற்போது இந்த கோவிலைப் பார்ப்பதற்கும் நாய் தெய்வங்களை வணங்குவதற்கும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் பெங்களூரு நகர ரயில் நிலையம் ஆகியவை சென்னபட்னாவிற்கு அருகிலுள்ளன. விமான நிலையம் மற்றும் இரயில் நிலையங்களுக்கு வெளியில் இருந்து சென்னபட்னாவிற்கு நேரடி பேருந்து வசதி கிடைக்கிறது. சென்னபட்னாவில் இருந்து, அக்ரஹார வலகெரேஹள்ளி கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 கிமீ தொலைவில் கோவில் அமைந்துள்ளது.