குரு பகவான், தட்சிணாமூர்த்தி: வித்தியாசம் தெரியுமா?

தட்சிணாமூர்த்தி என்பவர் யார், குரு பகவான் என்பவர் யார் என்பது பலருக்கு வேறுபாடு தெரிவதில்லை. அவர்களுக்கிடையே உள்ள தனித்துவம் என்ன?;

Update: 2021-11-13 01:33 GMT

குரு பகவான்

கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குவதற்காக அல்லது பரிகாரம் செய்வதற்கு என நினைத்து தட்சிணாமூர்த்தி முன் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் உண்மையான குரு முன் வழிபடச் செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக குரு பகவானுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை தட்சிணாமூர்த்தி முன் செய்து வருகின்றனர்.

நவகிரகங்கள் என்பது இறைவன் இட்ட கட்டளையை, கடமையைச் செய்யக் கூடிய ஒன்பது கோள்களாகும். அவற்றில் ஒருவர் தான் குரு பகவான் எனும் ப்ரஹஸ்பதி.

சிவன் கோயிலில் தென்முகம் பார்த்து அருள்பாலிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. அவருக்கு விருப்பமான நிறம் வெண்மை. அதனால் அவர் வெண்ணிற ஆடையில் அருள்பாலிப்பார். ஆகமத்தை உபதேசிக்கும் குருவின் உருவமாக தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் அடியில் அமர்ந்திருக்கக் கூடியவர். இவரை ஞான குரு அல்லது ஆதி குரு என அழைக்கப்படுகிறார்.

நவகிரகங்களில் இருக்கக் கூடிய குரு பகவானோ வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பார். இவருக்கு உகந்த நிறம் மஞ்சள். அதே போல் அவருக்கு விருப்பமான நைவேத்தியம் கொண்டைக் கடலை.

இவருக்கு மஞ்சள் வஸ்திரத்தைச் சாற்றுவதும். கொண்டைக்கடலை மாலை அணிவிப்பதும் உகந்தது. ஆசிரியர் தொழிலைச் செய்வதால் இவரை பொதுவாக குரு என அழைக்கப்படுகின்றார்.

இப்போதாவது ஞானத்தை வழங்கக்கூடிய குரு தட்சிணாமூர்த்தி வேறு. நவகிரகங்களில் இருக்கக் கூடிய குரு வேறு என்பதை உணருங்கள். அவரவருக்குரிய வழிபாடு, பரிகார முறை வேறு என்பதை உணர்ந்து சரியான முறையில் வழிபடுவது அவசியம்.

இன்று குருபெயர்ச்சி. மகர ராசியில்  இருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.

Tags:    

Similar News