Dhanvantari Mantra in Tamil-தன்வந்திரி மந்திரம் சொன்னால் என்ன பலன் கிடைக்கும்? தெரிஞ்சுக்கங்க..!

தீராத நோய்களையும் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம் என்று புகழப்படுகிறது. இந்த மந்திரத்தை 108 முறை கூறுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.;

Update: 2023-12-27 11:08 GMT

dhanvantari mantra in tamil-தன்வந்திரி மந்திரம் பயன்கள் (கோப்பு படம்)

Dhanvantari Mantra in Tamil

நோய்கள் தீர்க்கும் தன்வந்தரி மந்திரம்

ஓம் நமோ பகவதே

வாசுதேவயா தன்வந்த்ரயே

அமிர்தகலாஷா ஹஸ்தியா

சர்வாமய வினஷானயா

த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ:

Dhanvantari Mantra in Tamil

தன்வந்திரி இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறது. இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி(தனிக்கோயிலில்) காணப்படுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

அதிபதி – ஆயுர் வேதத்திற்கு

தன்வந்திரி அவதார தோற்றம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக நம் தேசத்தில் தோன்றியதே ஆயுர் வேத மருத்துவம். இந்த மருத்துவமுறையை இறைவனே மனிதர்களுக்கு வழங்கினார் என்பது ஐதீகம். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் இவற்றோடு ஐந்தாவது வேதம் ஒன்றும் உண்டு. அது தான் இந்த ஆயுர்வேதம் என்று சொல்லப்படுகிறது.

Dhanvantari Mantra in Tamil

ஆயுர்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமஸ்கிருத சொல்லின் தமிழ் வடிவமாகும். சமஸ்கிருதத்தில் ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேத என்பது கல்வி தொடர்பானது அல்ல, அறிவுத்துறை என்று பொருள்படக் கூடியது. எனவே ஆயுர்வேதம் என்பது நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்று பொருள் தருகிறது.

தன்வந்திரி பகவானின் வடிவம்:

பகவான் விஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பன்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும், முன்னிரு கரங்களில் அமிர்த கலசத்தை ஏந்தியவாறும், முன் இடக்கையில் அமிர்த கலசமும், வலக்கையில் அட்டைப் பூச்சியை ஏந்தியும் காட்சியளித்தார். முந்தைய மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. அதை இப்போதுள்ள தற்கால மருத்துவமும் ஏற்றுக் கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

Dhanvantari Mantra in Tamil

தேவர்கள் அசுரர்களுடன் போராடி வலிமை இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்திரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப் பெற்றார்கள்

Dhanvantari Mantra in Tamil

மருத்துவம்

தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம். பிரமன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரியக் கடவுளுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரியனும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார்.

சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள். தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம்.

Dhanvantari Mantra in Tamil

எனவே, இவரையேச் சூரியன் என்றும் சொல்வார்கள். சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையேக் குறிப்பிடுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது.

நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி பகவான்:

இன்றைய காலச் சூழ்நிலையில் பல்வேறு நோய்களால் மனித குலம் படும் இன்னல்கள் ஏராளம். இதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல்களும், பொருளாதார நெருக்கடிகளும் ஏராளம். அதிலும் மருந்துகளே கண்டு பிடிக்க முடியாத பல தொற்று நோய்களில் சிக்கி மனித குலம் அவதியுறும் காலம் இது. எத்தனையோ மருத்துவ முறைகளை நாடி நாம் சென்றாலும், அதோடு இறை நம்பிக்கையோடு கடவுளை வணங்கினால் நோய்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழலாம். நோய்கள் தீர வணங்க வேண்டிய கடவுள் தன்வந்திரி பகவான்.

Dhanvantari Mantra in Tamil

மனிதர்களுக்கு நோய் நொடிகள் அவரவர் கர்ம வினைப்படியே வருகின்றன. இதிலிருந்து நம்மை முழுமையாக காப்பாற்ற வல்லது தன்வந்திரி பகவான் வழிபாடாகும். இவரை வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கி, ஆரோக்கியம் உண்டாகும். ஏனென்றால் ஸ்ரீரங்க நாதருக்கே வைத்தியம் பார்த்தவர் தன்வந்திரி பகவான்.

மேலே தரப்பட்டுள்ள தன்வந்திரி மந்திரத்தை நோய்வாய்பட்டவர்களுக்காக தன்வந்திரி பகவானை வேண்டி தினமும் 21 முறை சொல்லுங்கள். நீங்கள் யாருக்காக இந்த பிரார்த்தனையை செய்தீர்களோ அவர்களுடைய தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். நீண்ட காலம் சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

Tags:    

Similar News