characters of scorpio in tamil-நீங்க விருச்சிக லக்கினத்தில் பிறந்தவரா..? அப்ப உங்க குணம் இப்பிடித்தான் இருக்கும்..!

characters of scorpio in tamil-ஒவ்வொரு லக்கினக்காரருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். விருச்சிக லக்கினக்காரரின் குணம் எப்படி இருக்கும்?

Update: 2023-05-20 07:56 GMT

characters of scorpio in tamil-விருச்சிக லக்கினக்காரரின் குணாதிசயங்கள்.(கோப்பு படம்)

சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் அடிப்படையில் ஒவ்வொருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு அவர்களுக்கான லக்கினம்,நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியன சாஸ்திர நூல்களில் இருந்து கணிக்கப்படுகிறது.

ஒவ்வொரு லக்கினக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் இன்று விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாங்க.

characters of scorpio in tamil


விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்?

விருச்சிக லக்னத்தின் அதிபதி செவ்வாய். விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராய் இருப்பார்கள். இவர்களுக்கு முன் கோபம் என்பது முந்திரிக்கொட்டை மாதிரி மூக்கு மேல் வந்து நிற்கும். அது அவர்களின் கூடப் பிறந்தது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் முடிக்க நினைப்பார்கள். அவசர குணம் அதிகம் இருக்கும். எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றே செய்வார்கள். சிறிதும் பொறுமை இல்லாதவர்களாக இருப்பார்கள்.

characters of scorpio in tamil

சுயமரியாதை உடையவர்கள் 

ஆனால் ஒரு குணம் மட்டும் அவர்களிடம் மிகவும் ஒட்டிக்கொண்டதாகும். அதாவது விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் சுயமரியாதையுடன் வாழ நினைப்பவர்கள். சுயமரியாதையை சீண்டினால் கொதித்து எழுவார்கள். இவர்கள் தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். யாருக்காவது இவர்கள் மூலம் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் சாதித்துக்கொள்வது சுலபம். இவர்களை புகழ்ந்தால் போதும், காரியம் தன்னால் முடிந்துவிடும். விருச்சிக லக்னத்துக்கு சந்திரன் 5,9 ஆம் இடங்களில் இருந்தால் நல்ல வசதி வாய்ப்புகளும் செல்வமும்,செல்வாக்கும்,நிறைய சொத்துக்களும் இந்த லக்னத்தாரருக்கு இருக்கும்.

ஏமாற்ற முடியாது 

விருச்சிக லக்கினக்காரரை யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது. ஒருவேளை அவர்கள் அறியாமல் அவர்களை யாராவது ஏமாற்றி இருந்தால் அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது பாடம் கற்பிக்காமல் விடமாட்டார்கள். பிறரை கேலியும் கிண்டலும் செய்து நையாண்டியாக பேசுவதில் வல்லவர்கள். தன்னுடைய கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இவர்கள் பிறருக்கு எதையாவது சொன்னால் பெரும்பாலும் பலிக்கும். இவர்களின் கணிப்பு பெரும்பாலும் சரியாகவே இருக்கும். எல்லாம் தெரிந்தவர்கள் போல பேசுவார்கள்.

பணம் தாராள புழக்கம் 

பணவரவு எந்த வகையிலாவது இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இவர்களின் சொல்லுக்கு செல்வாக்கு அதிகம். அதனால் எப்போதும் இவர்களுக்கு எதிரிகள் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். பிறரை அதிகாரம் செய்யும் வேலையே இவர்களுக்கு பிடித்ததாகும்.

characters of scorpio in tamil


வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில்தான் இவர்கள் வளமோடு நன்றாக வாழ்வார்கள். இவர்களுக்கு சந்தேக புத்தி அதிகம் இருக்கும். அதனால் மற்றவர்களுடன் இவர்கள் நெருக்கமாக பழக மாட்டார்கள். எப்போதும் ஏதாவது ஒரு இலட்சியத்தை கையில் வைத்துக்கொண்டே இருப்பார்கள். அந்த இலட்சியத்தை அடைய கடுமையாக உழைப்பார்கள். வாழ்வில் வெற்றி பெறுவதற்காக  எல்லா வழிகளிலும் முயற்சி செய்வார்கள்.

சுறுசுறுப்புமிக்கவர்கள் 

இவர்கள் சற்று முர்க்கத்தனம் மிகுந்தவர்கள். இவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள். எதையும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பது என்பது இவர்களுக்கு அறவே பிடிக்காது. இவர்களுக்கு சில சமயங்களில் இனம் புரியாத மனக் கவலைகளும் பதட்டமும் வந்து போகும். இவர்கள் தங்களுடைய கடுமையான உழைப்பு, அறிவாற்றல், முயற்சிகளில் முன்னேற்றம் காண்பார்கள்.

Tags:    

Similar News