Buthar quotes tamil-புத்தர் என்ன சொன்னார்..? இதெல்லாம்தான்..!
புத்தர் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ஆன்மீக மதகுரு ஆவார். இவர் உலகின் முக்கிய மதங்களில் ஒன்றான பௌத்த மதத்தை தோற்றுவித்தவர்.;
Buthar quotes tamil
‘கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர்.
இவர் ஒரு பணக்கார மன்னனின் மகனாகப் பிறந்த சித்தார்த்த கௌதமர் ஆவார். ஆடம்பரமாக வளர்ந்த அவர், உலகில் கண்ட துன்பங்களைக் கண்டு கலங்கினார். அவர் தனது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறி துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு வழியைத் தேடினார்.
ஆறு வருட தேடலுக்குப் பிறகு புத்தர் போதி மரத்தடியில் ஞானோதயம் அடைந்தார். துன்பத்திற்குக் காரணம் ஆசை என்றும், துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளை அவர் பின்பற்றினார்.
மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர்.
Buthar quotes tamil
புத்தரின் மேற்கோள்களை வாசகர்களுக்காக இங்கே தந்துள்ளோம். படித்து பயன்பெறுங்கள்.
அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.
வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டுக் கொடுங்கள். இல்லை விட்டு விடுங்கள்.
உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு. அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது. உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.
Buthar quotes tamil
இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்கு தான் உண்டு.
தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும்,
எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.
Buthar quotes tamil
உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால்,
அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம். உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்.
நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால். நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.
உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்.
Buthar quotes tamil
இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள். நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான் வாழ்க்கையை இனிமையாக மாற்றும்.
உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில் சரியான உதவிகளை செய்பவன் தான். அந்த நட்பை விட்டு விடக் கூடாது.
ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட நீ தனியாக வாழ்வதே சிறந்தது.
அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.
Buthar quotes tamil
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.
மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.
ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.
ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான். ஒருவன் என்னை அடித்தான். என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது.
Buthar quotes tamil
செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும்; செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில் நிலைத்திருப்பது கிடையாது.
போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது உன் மனதை நீ வெற்றி கொள்வது.
நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது.
பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
Buthar quotes tamil
நமது உதடுகளை அரண்மனை வாயிற்கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும். நமது வாயிலிருந்து வெளிப்படும்ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும்.
நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும் உன் நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது நல்லதா இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி.
வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும் இருக்கத் தான் செய்யும். அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
Buthar quotes tamil
ஆரோக்யம் மிகப்பெரிய பரிசு,மனநிறைவே மிகப்பெரிய செல்வம்.
தேவைப்படும் போது தேடப்படுவாய், அதுவரை அமைதியாய் இரு.
நெருங்கியவர்களோடு மட்டும் நீ விளக்கமாக பேசு, மற்றவர்களோடு எப்போதும் சுருக்கமாகவே பேசு.
தேவைகள் குறையும் போது தான்,தெய்வத் தன்மை அடைய முடியும்.
Buthar quotes tamil
இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி, உண்மைக்கு மட்டும்தான் உண்டு.
பறக்கவேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் உங்கள் சுமையை வீசி எறியுங்கள்.
ஆயிரம் வெற்று வார்த்தைகளை விட மேன்மையானது,அமைதியை கொடுக்கும் ஒரே வார்த்தை.
கடவுளுக்கு தொண்டு செய்வதை விட சிறந்தது, உண்மைக்கு கீழ்ப்படிந்து நடப்பது.
Buthar quotes tamil
ஆசைக்கும் அன்புக்கும் அடிமையாகாதீர்கள். ஏனெனில், இரண்டுமே உங்களை அடிமையாக்கி விடும்.
காயங்களோடு சிரிப்பது எளிதல்ல. அப்படி சிரிக்கத் தொடங்கி விட்டால் எந்தக் காயமும் பெரிதல்ல.
எதை நீ அதிகம் விரும்புகிறாயோ, அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும்.
நீ செல்வதற்கு பாதையை தேடாதே, பாதையை நீயே உருவாக்கு.
Buthar quotes tamil
எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள். ஆனால் யார் வழியையும் பின்பற்றாதே
நடக்கும் முன்னே, நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள்.நடந்த பின்னே நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்.
நன்றாக இரு, நல்லது செய், நீ மகிழ்ச்சியாக இருப்பாய்.
வாழ்வு என்பது சில நொடியில் முடிந்து போவது அல்ல. ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்வதாகும்.
Buthar quotes tamil
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை.
தவறு செய்தவர்களை மன்னித்துவிடு. ஆனால், அவர்களை திரும்ப நம்பும் அளவுக்கு முட்டாளாக இராதே.
விழுதல் என்பது வேதனை, விழுந்த இடத்தில் மீண்டும் எழுவது என்பது சாதனை
புயலுக்கு அசையாத பாறைபோல, புகழ்ச்சிக்கு மயங்காமல் வாழுங்கள்
இவ்வுலகில் வேரில்லாமலும், நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி ஆசை தான்.