போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தர்..! பௌத்தம் நிறுவிய துறவி..!

Buthar Quotes Tamil-சித்தார்த்த கௌதமர்,பொதுவாக புத்தர் என்று குறிப்பிடப்படுகிறார். 6 அல்லது 5 ஆம் நூற்றாண்டு BCE காலத்தில் தெற்காசியாவில் வாழ்ந்த துறவி.;

Update: 2022-11-21 11:07 GMT

Buthar Quotes Tamil

Buthar Quotes Tamil

கௌதமர் புத்த மதத்தை நிறுவியவர். அவர் மத போதகரும் ஆவார். புத்த பாரம்பரியத்தின் படி, அவர் தற்போதைய நேபாளத்தில் உள்ள லும்பினியில்,சாக்கிய குலத்தின் அரச வம்சத்து பெற்றோருக்குப் பிறந்தார். ஆனால், வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாக வாழ்ந்தார். தனது இல்லற வாழ்க்கையைத் துறந்தார். பிச்சை எடுத்து உண்பது, சந்நியாச வாழ்க்கை, தியானம் என்று வாழ்க்கை நடத்தி, தற்போது இந்தியாவில் உள்ள போத்கயாவில் ஞானம் பெற்றார். புத்தர் அதன்பின் கீழ் இந்தோ-கங்கை சமவெளி வழியாக அலைந்து, போதனை செய்து துறவற அமைப்பை உருவாக்கினார்.

அவர் சிற்றின்பம் மற்றும் கடுமையான சந்நியாசம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு நடுத்தர வழியைக் கற்பித்தார். நிர்வாணத்திற்கு வழிவகுத்தார். அதாவது அறியாமை, ஏக்கம், மறுபிறப்பு மற்றும் துன்பத்திலிருந்து விடுதலை. சரியான முயற்சி, நினைவாற்றல் மற்றும் ஞானம் போன்ற புத்த நெறிமுறைகளில் தியானம் மற்றும் அறிவுறுத்தலை உள்ளடக்கிய மனதின் பயிற்சியாக இருந்தது. அவர் குஷிநகரில் இறந்தார். பரநிர்வாணம் அடைந்தார். புத்தர் ஆசியா முழுவதும் பல மத மக்கள் மற்றும் சமூகங்களால் போற்றப்படுகிறார்.

  • அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.- புத்தர்
  • வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும். - புத்தர்
  • நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டு கொடுங்கள். இல்லை விட்டு விடுங்கள்.- புத்தர்
  • உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு. அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது. உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை. - புத்தர்
  • இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்கு தான் உண்டு.- புத்தர்
  • தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். - புத்தர்
  • உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும். - புத்தர்
  • ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும்,
  • எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது. - புத்தர்
  • உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம். உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்.. - புத்தர்
  • நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால். நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். - புத்தர்
  • உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும். - புத்தர்
  • இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள். நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான் வாழ்க்கையை இனிமையாக மாற்றும். - புத்தர்
  • உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில் சரியான உதவிகளை செய்பவன் தான். அந்த நட்பை விட்டு விடக் கூடாது. - புத்தர்
  • ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட நீ தனியாக வாழ்வதே சிறந்தது. - புத்தர்
  • அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். - புத்தர்
  • அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி. - புத்தர்
  • மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான். - புத்தர்
  • ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.- புத்தர்
  • ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான். ஒருவன் என்னை அடித்தான். என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது.- புத்தர்
  • செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும். செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில் நிலைத்திருப்பது கிடையாது.- புத்தர்
  • போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது உன் மனதை நீ வெற்றி கொள்வது. - புத்தர்
  • நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும். - புத்தர்
  • நமது உதடுகளை அரண்மனை வாயிற் கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும். நமது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும். - புத்தர்
  • நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும் உன் நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது நல்லதா இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி. - புத்தர்
  • வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும் இருக்கத் தான் செய்யும். அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.- புத்தர்
  • விழுதல் என்பது வேதனை! விழுந்த இடத்தில, மீண்டும் எழுதல் என்பது சாதனை!
  • மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும் இல்லையெனில், மௌனமாக இருப்பதே சிறந்தது.
  • கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்.
  • எந்தக் காலம் காயைக் கனியாக்குகிறதோ அந்தக் காலம் கனியை அழுகுவும் செய்கிறது. அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.
  • அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.

சோம்பலும் சோர்வு கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட ஒருநாள் பெருமுயற்சியோடு வாழ்வது மேலானது.

  • ஆசையை வென்ற மனிதனை இந்த உலகத்தில் எவராலும் வெல்லமுடியாது.
  • இந்தப் பரந்த உலகிலே எதுவுமே நிலையில்லை. நிலையாமை ஒன்றே நிலைத்திருக்கிறது. ஆகையால்தான் உலகப் பொருட்களில் இன்பம் காண முடிவதில்லை.
  • பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே தணிக்க முடியும்.
  • போரில் ஆயிரம் பேரை வெற்றி பெறுவதை விட, மனதை வெற்றி கொள்வதே உயர்ந்த செயல்.
  • மூடனை பிறர் அளிக்கத் தேவையில்லை, அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வான்.
  • பிறரிடம் குறை கண்டுபிடிப்பது வெகு சுலபம், ஆனால் தன் குற்றத்தைத் தானே அறிவதுதான் வெகு சிரமம்.
  • சிலந்தி தன் வலைக்குள்ளேயே சுற்றுவதைப் போல் மனிதர்கள் ஆசைகுள்ளே கட்டுண்டிருக்கின்றனர்.
  • யார் ஒருவர் சிறிய நற்செயல் செய்தாலும் அவரை மனதாரப் பாராட்டுங்கள், அதுவே அவர் மேலும் மேலும் நற்செயல்கள் புரிவதற்கு உந்துதலாக இருக்கும்.
  • எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகியே இரு. அவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பரிச்சனைகளை காண்பார்கள்.
  • தாமரை இலை மீது தண்ணீர் போலவும், ஊசி முனை மீது கடுகு போலவும் இன்பங்களில் ஒட்டிக்கொள்ளாமல் எவன் இருக்கிறானோ அவனே உயர்ந்தவன்.
  • பிராத்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.
  • உண்மை நங்கூரம் பாய்ச்சிய கப்பலைப்போல அமைதியுடன் இருக்க வேண்டும்.
  • எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்கத்தே, உன் பணியை ஊக்கமுடன் செய்.
  • நன்மையோ, தீமையோ உனது செயலின் பயனை நீ அடைந்தே தீரவேண்டும்.
  • பயனில்லாத சொற்களைப் பேசுபவன் வாசமில்லாத மலருக்கு ஒன்று தான்.
  • நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.
  • ஒரு பகைவனால் ஏற்ப்டும் தீமையை விட அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது.
  • மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை, அறிவாளிகள் புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை.
  • நறுமணம் காற்றடிக்கும் பக்கமாகத்தான் பரவும். காற்றுக்கு எதிராகப் போகாது. ஆனால் நல்ல மனிதருடைய வாசனை காற்றையும் எதிர்த்து எங்கும் எல்லா இடங்களுக்கும் செல்லும்.
  • எதனையும் ஆராய்ந்து பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இருந்தால் நம்பு; இல்லையேல் கடவுளே நேரில் வந்து கதறினாலும் பகுத்தறிவுக்குப் புறம்பான சொல்லையோ செயலையோ ஏற்காதே.
  • தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News