உங்க பிள்ளை படிக்கலையா..? அட.. ஆலமரத்தடியில் உட்கார வையுங்க..! அப்புறம் பாருங்க..!

Banyan Tree Uses in Tamil-'ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்று ஏன் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்று விரிவாக பார்க்கலாம் வாங்க.;

Update: 2022-12-24 09:47 GMT

Banyan Tree Uses in Tamil

Banyan Tree Uses in Tamil-ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நீண்ட காலம் வாழ்க என்று வாழ்த்துவதை நாம் கேட்டிருப்போம். பெரியவர்கள் வாழ்த்தும் போது கூட பெரிய மரங்களைத்தான் ஒப்பிட்டு வாழ்த்துவார்கள். ஆலமரம் தழைப்பிற்கு உரிய மரம். ஆலமரம் தழைத்து ஓங்கி கிளை பரப்பி பெருகும் மரமாகும். பல பறவைகள் கூடுகட்டி வாழும் ஒரு சமூக மரமாகும்.

அதேபோல ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. நாலடியாரும், திருக்குறளும் படித்தால் வாழ்க்கை சிறக்கும். அதேபோல ஆலங்குச்சியும், வேலங்குச்சியும் பல்லுக்கு உறுதியளிக்கும்.

பல்லுக்குறுதி 

கருவேல மரப்பட்டை அவ்வளவு விசேஷமானது. அதனால் கருவேல மரக்குச்சியிலும், ஆலமரக்குச்சியிலும் பல் தேய்த்தால் ஈறுகள் வலுவடையும். பல் தேய்க்கும் போது கெட்ட பித்த நீர்களெல்லாம் உமிழ் நீரோடு கலந்து வெளியே வந்துவிடும். அதனால்தான் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று அதன் மருத்துவ குணம் அறிந்துதான் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.


மேலும் ஆலமரம் மிகவும் புனிதமானது. இந்துக்கள், புத்த மதத்தைச் சார்ந்தவர்கள், ஜைணர்கள் போன்ற மூன்று மதத்தைச் சார்ந்தவர்களுக்கு ஆலமரம் மிகவும் புனிதமான மரம். இதனடியில் பல மகான்கள், சித்தர்களெல்லாம் அமர்ந்து தவநிலை அடைந்திருக்கிறார்கள்.

ஏசியெல்லாம் தூசி 

இந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்தால் குளிர்சாதனத்தில் கிடைக்கும் காற்றைவிட தூய்மையான காற்று கிடைக்கும். அக்னி நட்சத்திரக் காலங்களில் கூட குளுகுளுவென்று இருக்கும். ஏனென்றால் அதனுடைய இலை அமைப்பில் அதிகமான குளோரோ·பில் அமைந்திருக்கிறது. பச்சையம் என்கிறோமே அது அதிகம். மேலும், சின்னதாக மெழுகுத் தன்மை அந்த இலையில் இருக்கும். அதனால் அது வெப்பம் அதிகமாகத் தாக்காத அளவிற்கு கட்டிக் காக்கிறது.

மக்குகளை படிக்க வைக்கும் ஆசிரியர் 

சரியாகப் படிக்காத பிள்ளைகளை ஆலமரத்தின் கீழ் உட்காரவைத்து படிக்க வைத்துப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள். மக்கு என்று படிக்க முடியாதவர்களைக் கூட, ஆலமரத்தின் அடியில் உட்கார வையுங்கள். அப்படி ஆலமர அடியில் உட்கார்ந்தாலே ஒரு சாத்வீகமான எண்ணங்கள் தோன்றும். எமோஷனல், டென்ஷன், இரத்த அழுத்தம் போன்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அவர்களுக்கே தெரியாமல் தலை முடியிலிருந்து கால் பாதம் வரை ஒரு மசாஜ் நடந்து கொண்டிருக்கும் அற்புத உணர்வை அனுபவிக்க முடியும். ஆனால் அவர்களால் நேரடியாக உணரமுடியாது. அது உள்ளேயிருந்து வேலை செய்யும். பார்த்தீங்களா மக்குப்பிள்ளைகளை படிக்க வைக்கும் வாத்தியாராகவும் இந்த ஆலமரம் இருக்கிறது.

மூளைக்கு மசாஜ் 

மசாஜுக்குப் போனால் எப்படி உட்காருகிறோமோ, அதே போல ஆழ மரத்தடியிலும் சாதாரணமாக உட்கார வேண்டும். அப்படி உட்கார்ந்தால் தானாக மகிழ்ச்சி மலரும். நம்மை அறியாத ஒரு புத்துணர்வு உண்டாகும். அப்படியே படிப்படியாக டென்ஷன், எமோஷனெல்லாம் குறைவதை உணரலாம்.

மன அமைதியைக் கொடுக்கும். நினைவாற்றலைத் தூண்டும். ஆலமரத்தின் காற்றை சுவாசித்தாலே நினைவாற்றல் பெருகும். அதனால்தான் மக்குப் பிள்ளைகளைக் கூட அங்கு உட்கார வைத்துப் பாருங்கள். அவர்கள் நன்றாகப் படிப்பார்கள். மனதில் இருக்கும் ஒருவிதமான பதற்றம் விலக ஆரம்பித்தாலே மூளை சீராக செயல்படத்தொடங்கும். மூளை சீராக செயல்படத் தொடங்கினாளல் படிக்கும் அனைத்தையும் மூளை பதியவைக்கத் தொடங்கும். அப்புறம் என்ன படிக்காத பிள்ளை நன்றாக படிக்கத்தொடங்கும்.

மூலம் குணமாகும் 

மேலும், ஆலமரக் காற்றை சுவாசித்தால் மூல நோய் குணமாகிறது. ஏனென்றால், அந்தக் காற்றில் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய வெப்பத்தைக் குறைக்கக்கூடிய சக்தி இருக்கிறது. வெட்ட வெட்ட முத்தினால் குட்ட என்று சொல்வார்கள். உடம்பில் அதிக சூடு ஏற்பட்டால் அதனை வெட்டச் சூடு என்பார்கள். இந்த வெட்ட அதிகமானால் குட்ட. அதாவது, உஷ்ணம் அதிகமானால் குஷ்டம் வந்துவிடும். இந்த வெட்ட குட்ட இரண்டையுமே தணிக்கக் கூடிய நிழல், இந்த ஆலமரத்து காற்று.

தண்டத்தட்டு 

அந்த காலத்தில் தாத்தா வயதை ஒத்தவர்கள் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள். நீண்ட தூரம் பயணம் போனால் தவறாமல் அந்த தண்டத்தையும் அவர்கள் கையில் எடுத்துக்கொள்வார்கள். அந்த நாட்களில் அவ்வாறு தண்டம் வைத்திருக்கும் தாத்தாவிடம் போய் 4 நாட்களாக என் பிள்ளைக்கு ஜுரம் என்று சொல்வார்கள். அப்போது தாத்தா அந்த தண்டத்தை எடுத்து ஜுரம் உள்ள குழந்தையின் உடலில் 4 தட்டு தட்டுவார். இதேபோல, குழந்தை சரியாகத் தூங்கவேயில்லையென்றால் அதற்கும் 4 தட்டு தட்டுவார். வேப்பிலையால் மந்திரிப்பதுபோல் குழந்தையின் முகத்தில் சாமரம் வீசுவார். பின்னர் அந்த தண்டத்தால் 4 தட்டு தட்டுவார். அதன்பிறகு, காத்து கருப்பு என்று பயப்படுபவர்களுக்கு 4 தட்டு தட்டுவார்.

ஏன் அப்படி தட்டுகிறார்? தண்டத்தால் தாத்தா தட்டுவதற்கு அறிவியல் பூர்வமான காரணம் உண்டு. அதாவது அந்த தண்டம் பழமையான ஆல மர கம்பால் செய்யப்பட்டது. ஆலமரத்திற்கென்று சில தனித்தன்மை வாய்ந்த குணங்கள் உள்ளன. அதில் அதீத சக்திகள் உள்ளன. அதனால் இதில் தட்டினால் குழந்தைகளின் உடலில் சில மாற்றங்கள் உண்டாகும். தெய்வ நம்பிக்கையுடன் அதைச் செய்யும் போது குணப்படுத்தும் தன்மையை அது அதிகரிக்கும்.

விந்தணுக்கள் வீரியம் பெற 

காது, மூக்குப் பிரச்னைகளுக்கு ஆலம்பாலை பக்குபவப்படுத்தி பயன்படுத்தினால் அது நீங்கும். அடிப்பட்டு வீங்கிய இடத்தில் இந்தப் பாலைத் தடவினால் வீக்கம் வடிந்துவிடும். ஆலமர இலையில் விந்தணுக்களை அதிகரிக்கக் கூடிய சக்தி இருக்கிறது. விந்தணுக்களின் உயிர்த்தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் உண்டு.

சிறுநீர் பாதை தொற்றுக்கு 

ஆலமரப்பட்டையை உலர்த்தி காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடம்பு பளபளப்பாக ஆகும். இதையெல்லாம் சித்த மருத்துவர்கள் தருவார்கள். ஆலம்பழத்திற்கு சிறுநீர் பாதை தொற்று பிரச்னைகள், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டு.

ஆலமரம் எத்தனை பயன்தரக்கூடியதாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டீர்களா? ஏங்க.. எங்க போறீங்க..கொஞ்சம் நில்லுங்க. அட போங்க. நான் ஆலமரத்தடிக்கு போறேன் என்று ஓடிக்கொண்டிருந்தார். அப்ப நீங்க..?!!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News