Bakrid wishes in tamil-நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
பக்ரீத், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மார்க்கம் தழுவிய அனைத்து மக்களும் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும்.
Bakrid wishes in tamil
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகம் மற்றும் ஈகைப் பண்பை கொண்டாடும் விதமாக இந்நாள் பின்பற்றப்படுகிறது. ஈத்-உல்-ஜுஹா என்பது வரலாற்றில் இறைத்தூதர் நபி இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூறும் ஒரு பண்டிகை ஆகும். இதனால் இந்த நாள் ஈகைத் திருநாள் அல்லது தியாகத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.
பண்டிகை என்று பொருள்படும் ஈத் எனும் அரபு வார்த்தை தியாகம் என்று பொருள்படும் ஜூஹா எனும் வார்த்தைகள் இணைந்து ஈத் அல் ஜூஹா எனும் வார்த்தைப் பிரயோகமாக உருவாகி உள்ளது.
இஸ்லாமிய மாதமான ஜுல் ஹிஜ்ஜாவின் 10ஆவது நாளில் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை, சுமார் மூன்று நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது.
இதோ உங்களுக்காக சில வாழ்த்துகள்
இந்த நன்னாளில் அல்லா உங்களுடன் இருப்பார். உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவட்டும்.
தியாக திருநாள் வாழ்த்துகள்; உங்கள் வளமான வாழ்க்கைக்கு அல்லாவின் அருள் என்றும் உங்களுடன் இருக்கும்.
இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்; இந்த இனிய நாளில் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் Eid-ul-Adha வாழ்த்துகள். ஆரோக்கியமும் வளமும் பெருகட்டும்.
இனிய பக்ரீத் வாழ்த்துகள்; இந்த இனிய நாளில் அல்லா உங்களுக்கு எல்லாமும் வழங்கட்டும்.
Bakrid wishes in tamil
இருப்பதைப் பிறருடன் பகிந்து வாழ் என்று அல்லா காட்டிய வழியில் பயணிக்க இந்த நாளில் உறுதி ஏற்போம். இனிய பக்ரீத் வாழ்த்துகள்.
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துகள்; இறைவன் உங்களின் வாழ்க்கை பயணத்தில் எப்போதும் துணையிருப்பார்.
இனிவரும் காலங்கள் வளமுடன் இருக்க வாழ்த்துகள். எல்லாமும் பெற்று இன்புற்று இருக்க பிரார்த்தனைகள்!
இந்த ஈகைத் திருநாள் உங்களது வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரட்டும். Bakrid Mubarak!
தியாக திருநாளாம் பக்ரீத் அன்று நம் துன்பங்கள் நீங்கி, ஒளிமிகுந்த நாட்கள் தொடரட்டும். இனிய பக்ரீத் வாழ்த்துகள்.
Bakrid wishes in tamil
இந்த தியாகத் திருநாளில் உங்கள் அனைத்து துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்.
எல்லா புகழும் இறைவனுக்கே. இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்.
மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ, பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்.
இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள். இந்த இனிய நாளில் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் Eid-Ul-Adha வாழ்த்துகள். ஆரோக்யமும் வளமும் பெருகட்டும்.
Bakrid wishes in tamil
ஈத் என்பது நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதும் தேவைப்படுபவர்களைப் பராமரிப்பதும் ஆகும். இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு அற்புதமான ஈத் அல்-ஆதா. இனிய பக்ரீத் வாழ்த்துகள்.
இந்த இனிய நாளில் அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், உங்கள் இதயத்தை அன்பினாலும், உங்கள் மனதை ஞானத்தினாலும் நிரப்பட்டும். இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்
அல்லாஹ் உங்கள் எல்லா பாவங்களையும் மன்னித்து, உங்கள் தியாகத்தை ஏற்றுக்கொண்டு, உங்கள் துன்பங்கள் அனைத்தையும் போக்கட்டும். ஈத் அல் அதா பக்ரீத் முபாரக்.
அல்லாஹ் மற்றும் அவனது தீர்க்கதரிசியின் போதனைகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு துணையாக இருக்கட்டும். இந்த பக்ரீத் உங்கள் குடும்பத்தில் அமைதியைக் கொண்டுவரட்டும் பக்ரீத் நல்வாழ்த்துகள்..!
Bakrid wishes in tamil
பக்ரீத் வாழ்த்துகள். இந்த ஈத் மந்திரம் உங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். மேலும் அதை உங்கள் நெருங்கிய நண்பர்கள் அனைவருடனும் கொண்டாடுங்கள். அது உங்கள் இதயத்தை அதிசயங்களால் நிரப்பட்டும்.