சபரிமலை பயணத்தை தொடரும் வாகனங்களின் கவனத்திற்கு.....!
செங்கோட்டை அருகே இருக்கும் அச்சன்கோவில் செல்லும் வாடகை வாகனங்கள் கேரளா பெர்மிட் இல்லாமல் செல்ல வேண்டாம்.
கேரளா RTO அதிகாரிகள் எல்லையில் (அச்சன்கோவில் செல்லும் வழி) அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்கிறார்கள். கடந்த காலங்களில் சென்றது போல் தற்போது செல்ல வேண்டாம்.
ஆன்மீக தளங்களில் உள்ள வாகன பார்க்கிங்கில் கட்டணம் கொடுக்கும் போது தாங்கள் இயக்கி வந்த வாகனத்திற்கு உண்டான ரசீது தானா என்று சரிபாத்துகொள்ளுங்கள்.
வாகனங்களுக்கு டீசல் போடும் போது முடிந்தவரை நகர எல்லைக்குள் இருக்கும் பங்க்குகளில் டீசல் நிரப்புங்கள். குறிப்பாக இரவு நேரத்தில் டீசல் போடும் போது மீட்டரை நன்கு கவனிப்பது நல்லது.
தொடர் வாகன இயக்கம் வேண்டாம். இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி சற்று ஓய்வு எடுத்துக்கொள்வது தங்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
வாகனங்களை மலைப்பகுதிகளில் 40,கி.மீ வேகத்திற்கு மேல் இயக்க வேண்டாம். தங்களின் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டாம். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து விடுங்கள்.
கேரளாவிற்கு தடை செய்யப்பட்ட (சிகரெட், பீடி, புகையிலை, பான்பராக்,) பொருட்களை பயணிகள் வாகனங்களில் எடுத்த செல்ல அனுமதிக்க வேண்டாம். ஓட்டுநர்களும் யாரும் பயன்படுத்த வேண்டாம்.
வாகனங்களை சோதனை செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான அபராதம் விதிப்பார்கள். வாகனத்தையும் பறிமுதல் செய்வார்கள்.
ஓட்டுநர்கள் தங்களின் வாகனத்திற்கு தேவையான சிறு, சிறு, உதிரிபாகங்களை வாகனத்தில் இருப்பு வைத்துக்கொள்ளுங்கள் அது அவசர நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த வாகனத்தையும் இயக்க வேண்டாம். ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம் கையில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஓட்டுநர்கள் யூனிபார்ம் (வெள்ளை சட்டை பேன்ட்)அணிந்து வாகனத்தை இயக்குங்கள். எல்ஈடி லைட்டுகள், ஏர்ஹாரன், பயன்படுத்த வேண்டாம். (அபராதம் விதிக்கிறார்கள்.)
ஆடியோ, வீடியோ, சத்தத்தை குறைவாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து அனைத்து வாகனங்களிலும் ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை இரண்டுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் (எதிர் திசையில் வருவது நம் சகோதரர்கள் என்ற எண்ணம் வேண்டும்)
நிலக்கல் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தும் போது டயர் அருகே முன்,பின், அடைக்கல் வைத்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருக்கும்.
சபரிமலைக்கு சமையல் டிரிப் செல்லும் போது வாகனத்தின் டிக்கியில் சிலிண்டர்களை வைக்க வேண்டாம், அது பாதுகாப்பு இல்லை.