ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகள்

மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று ஆருத்ரா தரிசனம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

Update: 2021-12-19 06:50 GMT

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று "திருவாதிரை" திருவிழா "ஆருத்ரா தரிசனம்" திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் "ஆதிரை" என்று அழைக்கப்படுகிறது. அதோடு திரு என்ற அடைமொழி சேர்த்து "திருவாதிரை" என்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.  சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் "திருவாதிரை". 

ஆருத்ரா அபிஷேக தினத்திற்கு அடுத்த நாள் வரும் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று திருஆதிரைக் களி என்பதாக, ஏழு அல்லது ஏழுக்குமேலான காய்கறிகள் கலந்த கூட்டுடன் இறைவனுக்குப் படைத்தளிக்க வேண்டிய முக்கியமான திருநாள். மோதகத்தின் ஒரு வகையான திருவாதிரைக் களி மிகவும் சுவையுடையது. மோதகக் குடும்பத்தைச் சார்ந்த இனிப்பு வகை ஆதலால், பிள்ளையாரின் ஆசீர்வாதமும் சேர்ந்து வருவதாகும்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.

"ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்

கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்

கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"

திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆடல்வல்லானின் அனைத்துத் திருத்தலங்களிலும் களி படைக்கப்படுகிறது.

அதனால் தான் "திருவாதிரை அன்று ஒருவாய்க்களி" பழமொழி வந்தது. ஆதிரை முதல்வனுக்கு களி செய்து வணங்கி அவரின் திருவடியை அடைவோமாக!.

Tags:    

Similar News