ஆடி அமாவாசை: கோயில்களில் பக்தர்கள் வழிபாடு,முன்னோர்களுக்கு தர்ப்பணம்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து தங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம்;

Update: 2023-08-17 10:45 GMT

சிவகாசி சிவன் ஆலயத்தில், தீபம் ஏற்றி வழிபாடு. நடத்திய பக்தர்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரையில் தங்கள் முன்னோர்களின் நினைவாக பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும்.

குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.. அந்தவகையில் மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக  அதிகாலையிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர், இங்குள்ள போத்திகள் மற்றும் விற்பனர்கள் மந்திரம் ஓதினர்.  எள், பச்சரிசி, தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர். இது போன்று இந்த நாட்களில் முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து, தங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பின்னர் இங்குள்ள அருள்மிகு ஏடகநாதர் ஏழவார்குழலிசிவன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மேலமடை தாசில்தார் நகர் ஆறுமுக சவுபாக்கியம் ஆலயத்திலும் மதுரை அண்ணா நகர் யானைக்குள்ளாய் அறிமுக முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்திலும் மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவினர் ஆலயத்திலும் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விநாயகர் மற்றும் சிவபெருமானுக்கு விளக்கேற்றி வழிபட்டனர் இதே போன்று மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்தனர்.

சிவகாசி சிவன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு :

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மாள் எழுந்தருளியுள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

எனவே மூலவர் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால், அனைத்து சன்னதிகளிலும் உள்ள சுவாமிகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு காலையில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.

பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகப் பகுதியில், முன்னோர்கள் நினைவாக ஏராளமான பக்தர்கள் நெய் விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன.

Tags:    

Similar News