27 Nakshatras Tamil-27 நட்சத்திரங்களும் அதிர்ஷ்டப் பொருட்களும்..! வச்சித்தான் பாருங்களேன்..!
27 Nakshatras Tamil-27 நட்சத்திரங்களும் அதிர்ஷ்டப் பொருட்களும்..! வச்சித்தான் பாருங்களேன்..!;
27 Nakshatras Tamil
27 Nakshatras Tamil
27 நட்சத்திரங்களும் அதற்கான ராசி பொருட்களும் தரப்பட்டுள்ளன.
1. அஸ்வினி, 2. பரணி,3. கார்த்திகை,4. ரோகிணி,5. மிருகசீரிஷம்,6. திருவாதிரை,7. புனர்பூசம்,8. பூசம்,9. ஆயில்யம்,10. மகம்,11. பூரம்,12. உத்திரம், 13. அஸ்தம்,14. சித்திரை,15. சுவாதி,16. விசாகம்,17. அனுஷம்,18. கேட்டை,19. மூலம்,20. பூராடம்,21.உத்திராடம்,22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,25. பூரட்டாதி,26. உத்திரட்டாதி, 27. ரேவதி
ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கு என்ன பொருட்கள் கையில் வைத்திருந்தால் ராசியாகும் என்பது தரப்பட்டுள்ளது.
1.அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் குதிரைத் தலை அல்லது குதிரை உருவத்தை சின்னமாக பயன்படுத்தலாம்.
2. பரணி நட்சத்திரக்காரர்கள் மண் பாத்திரம், அடுப்பு, முக்கோண வடிவத்தை சின்னங்களாக பயன்படுத்தலாம்.
3.கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கத்தி, வாள், அக்னி குண்ட தீ ஜுவாலை போன்றவற்றை தங்களுக்குரிய சின்னங்களாக பயன்படுத்தலாம்.
4. ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தேர், வண்டி, கோவில், ஆலமரம், சக்கரம் ஆகியவற்றை வெற்றிக்குரிய சின்னங்களாக பயன்படுத்தலாம்.
5. மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் மான் தலை மற்றும் தேங்காய் கண் ஆகியவற்றை அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்.
6.திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி போன்றவற்றை அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்.
7. புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வில் மற்றும் அம்புக்கூடு சின்னத்தை பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
8.பூசம் நட்சத்திரக்காரர்கள் தாமரை, புடலங்காய் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி போன்றவைகளை தங்களுக்குரிய வெற்றிச் சின்னங்களாக பயன்படுத்தலாம்.
9. ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சர்ப்பம் மற்றும் அம்மிக்கல் சிறந்த அதிர்ஷ்ட சின்னங்களாகும்.
10. வீடு, பள்ளக்கு மற்றும் நுகம்(எருதுகளை வண்டியில் பூட்டும் கட்டை) மகம் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட சின்னங்களாகும்.
11.கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை சின்னங்கள் பூரம் நட்சத்திரத்திற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
12. கட்டில் கால்கள் மற்றும் மெத்தை சின்னங்கள் உத்திரம் நட்சத்திரத்துக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
13. அஸ்தம் நட்சத்திரத்திற்கு கைகள் மற்றும் உள்ளங்கைகள் போன்றவற்றை அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்.
14.முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள் சின்னங்களை சித்திரை நட்சத்திரக்காரர்கள் பயன்படுத்தலாம்.
15. புல்லின் நுனி மற்றும் காற்றில் அசைகின்ற தீபச்சுடர் போன்றவற்றை அதிர்ஷ்ட சின்னங்களாக சுவாதி நட்சத்திரக்காரர்கள் பயன்படுத்தலாம்.
16.விசாகம் நட்சத்திரக்காரர்கள் முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரத்தை சின்னங்களாக பயன்படுத்தலாம்.
17. குடை, மலரும் தாமரை, வில் வளைவு போன்றவற்றை அனுஷம் நட்சத்திரக்காரர்கள் அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்
18. குடை, குண்டலம் மற்றும் ஈட்டி போன்றவற்றை கேட்டை நட்சத்திரக்காரர்கள் அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்.
19. மூலம் நட்சத்திரக்காரர்கள் அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானையின் தும்பிக்கையை அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்.
20. விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்களை பூராடம் நட்சத்திரக்காரர்கள் அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்.
21. யானைத்தந்தம் மெத்தை விரிப்பு கட்டில் கால்கள் போன்றவை உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட சின்னங்களாகும்.
22.விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்களை பூராடம் நட்சத்திரக்காரர்கள் அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்.
23.மிருதங்கம் மற்றும் உடுக்கை இசைக்கருவிகளை அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கான அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்.
24. பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம் சதயம் நட்சத்திரக்காரர்களுக்குரிய அதிர்ஷ்ட சின்னங்களாகும்.
25. கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள் பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட சின்னங்களாகும்.
26. கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள் சின்னங்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரியவை.
27. மீன் மற்றும் மத்தளம் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய அதிர்ஷ்ட சின்னங்களாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2