108 Sivan Potri-சிவனை வழிபட 108 போற்றிகள் போதும்..!

துன்பங்கள் சூழும்போது மனிதர்கள் இறைவனை நாடி நிற்கிறார்கள். இறைவனிடம் நம் கோரிக்கைகைளை வைத்து ஆழ்ந்து வணங்குவோம். நமது துன்பங்களை நீக்குவார் என்ற நம்பிக்கை ஒளியாக இருக்கிறது.;

Update: 2023-12-27 12:17 GMT

108 sivan potri-சிவன் போற்றி (கோப்பு படம்)

108 Sivan Potri

மனிதர்களாக பிறந்த அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கும் போது கடவுளை வணங்குவதை விட கஷ்டமாக இருக்கும் போது தான் கடவுளை வணங்குகிறோம். துன்பம் வரும்போதுதான் ஆண்டவனைத் தேடுகிறோம்.

அந்த சமயங்களில்தான் நாம் கடவுளிடம் நமது கஷ்டங்களைக் கூறுவோம். அப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அதைப்போல நீங்கள் கடவுளிடம் வேண்டியது கிடைத்துவிட்டால் பால் அபிஷேகம் செய்கிறேன். கால் வாங்கி வைக்கிறேன் என்று வேண்டிக்கொள்வார்கள். நீங்கள் ஏதாவது சொல்லி கடவுளிடம் வணங்கும் போது அவர்களுக்கு உரிய மந்திரம், ஸ்லோகம், போற்றிகள் போன்றவற்றை கூறினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

108 Sivan Potri

இந்தப்பதிவில் சிவனின் 108 போற்றிகளை பார்க்கலாம் வாங்க.

ஓம் அப்பா போற்றி!

ஓம் அரனே போற்றி!

ஓம் அரசே போற்றி!

ஓம் அமுதே போற்றி!

ஓம் அழகே போற்றி!

ஓம் அத்தா போற்றி!

ஓம் அற்புதா போற்றி!

ஓம் அறிவா போற்றி!

ஓம் அம்பலா போற்றி!

ஓம் அரியோய் போற்றி!

ஓம் அருந்தவா போற்றி!

ஓம் அனுவே போற்றி!

ஓம் அன்பா போற்றி!

ஓம் ஆதியே போற்றி!

ஓம் ஆத்மா போற்றி!

ஓம் ஆரமுதே போற்றி!

108 Sivan Potri

ஓம் ஆரணனே போற்றி!

ஓம் ஆண்டவா போற்றி!

ஓம் ஆலவாயா போற்றி!

ஓம் ஆரூரா போற்றி!

ஓம் இறைவா போற்றி!

ஓம் இடபா போற்றி!

ஓம் இன்பா போற்றி!

ஓம் ஈசா போற்றி!

ஓம் உடையாய் போற்றி!

ஓம் உணர்வே போற்றி!

ஓம் உயிரே போற்றி!

ஓம் ஊழியே போற்றி!

ஓம் எண்ணே போற்றி!

ஓம் எழுத்தே போற்றி!

ஓம் எண் குணா போற்றி!

ஓம் எழிலா போற்றி!

108 Sivan Potri

ஓம் எளியா போற்றி!

ஓம் ஏகா போற்றி!

ஓம் ஏழிசையே போற்றி!

ஓம் ஏறுர்ந்தாய் போற்றி!

ஓம் ஐயா போற்றி!

ஓம் ஒருவா போற்றி!

ஓம் ஒப்பிலானே போற்றி!

ஓம் ஒளியே போற்றி!

ஓம் ஓங்காரா போற்றி!

ஓம் கடம்பா போற்றி!

ஓம் கதிரே போற்றி!

ஓம் கதியே போற்றி!

ஓம் கனியே போற்றி!

ஓம் கலையே போற்றி!

ஓம் காருண்யா போற்றி!

ஓம் குறியே போற்றி!

108 Sivan Potri

ஓம் குணமே போற்றி!

ஓம் கூத்தா போற்றி!

ஓம் கூன்பிறையாய் போற்றி!

ஓம் சங்கரா போற்றி!

ஓம் சதுரா போற்றி!

ஓம் சதாசிவா போற்றி!

ஓம் சிவையே போற்றி!

ஓம் சிவமே போற்றி!

ஓம் சித்தமே போற்றி!

ஓம் சீரா போற்றி!

ஓம் சுடரே போற்றி!

ஓம் சுந்தரா போற்றி!

ஓம் செல்வா போற்றி!

ஓம் செங்கணா போற்றி!

ஓம் சொல்லே போற்றி!

ஓம் ஞாயிறே போற்றி!

ஓம் ஞானமே போற்றி!

ஓம் தமிழே போற்றி!

ஓம் தத்துவா போற்றி!

ஓம் தலைவா போற்றி!

ஓம் தந்தையே போற்றி!

ஓம் தாயே போற்றி!

ஓம் தாண்டவா போற்றி!

ஓம் திங்களே போற்றி!

108 Sivan Potri

ஓம் திசையே போற்றி!

ஓம் திரிசூலா போற்றி!

ஓம் துணையே போற்றி!

ஓம் தெளிவே போற்றி!

ஓம் தேவதேவா போற்றி!

ஓம் தோழா போற்றி!

ஓம் நமசிவாயா போற்றி!

ஓம் நண்பா போற்றி!

108 Sivan Potri

ஓம் நஞ்சுண்டாய் போற்றி!

ஓம் நான்மறையாய் போற்றி!

ஓம் நிறைவா போற்றி!

ஓம் நினைவே போற்றி!

ஓம் நீலகண்டா போற்றி!

ஓம் நெறியே போற்றி!

ஓம் பண்ணே போற்றி!

ஓம் பித்தா போற்றி!

108 Sivan Potri

ஓம் புனிதா போற்றி!

ஓம் புராணா போற்றி!

ஓம் பெரியோய் போற்றி!

ஓம் பொருளே போற்றி!

ஓம் பொங்கரவா போற்றி!

ஓம் மதிசூடியே போற்றி!

ஓம் மருந்தே போற்றி!

ஓம் மலையே போற்றி!

ஓம் மனமே போற்றி!

ஓம் மணாளா போற்றி!

ஓம் மணியே போற்றி!

ஓம் மெய்யே போற்றி!

ஓம் முகிலே போற்றி!

ஓம் முக்தா போற்றி!

ஓம் முதல்வா போற்றி!

ஓம் வானமே போற்றி!

108 Sivan Potri

ஓம் வாழ்வே போற்றி!

ஓம் வையமே போற்றி!

ஓம் விநயனே போற்றி!

ஓம் விநாயகனே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி..!

Tags:    

Similar News