புரட்டாசியில் அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது ? வாங்க சிஸ்டர்ஸ்.. பார்ப்போம்..!
புரட்டாசியில் தமிழகத்தில் அசைவம் சாப்பிடாதது ஏன் என்பதற்கு அறிவியல் பூர்வ காரணம் உண்டு.;
சுற்றுப்புற தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த மாற்றங்களை சரி செய்துகொள்ளும் செல்கள் நம்ம உடம்பில் இருப்பதால், அவைகள் மாற்றங்களுக்கேற்ப அவைகளை தகவமைத்துக்கொள்கின்றன. அதற்கேற்ற வகையில் நமது உணவுப்பழக்கங்களும் அமைய வேண்டும். அப்பத்தான் சாப்பாடு தட்ப வெப்பநிலைகளுக்கேற்ப நம்ம உடல் நலத்துக்கு பாதகங்களை ஏற்படுத்தாது. அந்த வகையில்தான் நாம புரட்டாசி மாதத்தில் அசைவத்தை தவிர்க்க புரட்டாசி விரதம் இருந்து வருகிறோம்.
அறிவியல் காரணம் :
புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலம். இந்த காலம், வெயில் காலத்து வெப்பத்தை விட அதிக தீங்கு தரக்கூடிய வெப்ப காலமாகும். உடலில் இருந்து வெப்பம் வெளியேறாத காலம். ஆகவே, இந்த காலத்தில் அசைவ உணவை சாப்பிட்டால் உடலின் சூட்டை மேலும் அதிகரித்து உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். அதனால்தான் அசைவ உணவை புரட்டாசி மாதத்தில் நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்தனர்.
இப்ப தெரியுதா ப்ரோக்களே.., சிஸ்டர்களே.. நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையும் எப்படி கணித்து செயல்பட்டுள்ளனர் என்று. அறிவியல் வளர்ச்சி அடையாத அந்த காலகட்டத்திலேயே, நம் முன்னோர்கள் காலத்தை கணிக்கும் திறன் பெற்றிருந்தனர் என்பது ஆச்சர்யமே.