புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜைக்கு சென்ற கார் - லாரி மீது மோதி விபத்து.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம்
ஆந்திராவில் புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜைக்கு சென்றுகொண்டிருந்தார் கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 5 மாத குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பெத்தாபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஐந்து மாத குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தெல்லரேவுல மண்டலம் பெத்தவலசாவில் இருந்து ராஜமகேந்திரவரத்திற்கு வர்மா என்பவர் தனது குடும்பத்தினருடன் புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜை செய்வதற்காக காரில் இன்று புறப்பட்டனர்.
இவர்கள் சென்ற கார் பெத்தாபுரம் அருகே சென்றபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் டிரைவர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே 5 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். காருக்குள் சிக்கி கொண்ட மேலும் 5 பேரை சம்பவ இடத்திற்கு வந்த பெத்தபுரம் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.