ரக்ஷா பந்தன் கொண்டாடுவது எதனால்?
Raksha Bandhan in Tamil-வட இந்தியர்களால் பெரிதும் விரும்பி கொண்டாடப்படும் நிகழ்வே ரக்ஷா பந்தன். சகோதரத்துவத்தை வலியுறுத்தும் Raksha Bandhan in Tamil - நிகழ்வாக இது கருதப்படுகிறது. தற்போது உலகெங்கும் இந்நிகழ்வு கொண்டாடுவதுதான் ஹைலைட்டே.
Raksha Bandhan in Tamil-ரக்ஷா பந்தன் என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்தி கொண்டாடப்படுவது. முன்பெல்லாம் இதனை வட இந்தியர்கள் மட்டுமே வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். ஆனால் தற்போது தென் இந்தியாவிலும் பரவிவிட்டது. அதுவும் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே நட்பு மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஏராளமானோர் அன்றைய தினம் கையில் கயிறு கட்டி விடுவது தொடர்கதையாகிவருகிறது.
இந்த கொண்டாட்டமானது இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிலும் பரவி வருவதுதான் இதனுடைய ஹைலைட்டான விஷயமே..ரக்ஷா பந்தன் என்பது ஒவ்வொரு ஆண்டு ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரர்களுக்கு சகோதரிகள் கையில் கயிறு கட்டி விடுவார்கள். அதாவது இந்த ஆண்டைப்பொறுத்தவரை இது 11 ந்தேதியா அல்லது 12 ந்தேதியா என்ற குழப்பமே இதுவரை நீடித்து வருகிறது.
இந்திய நாட்டின்பலமே வேற்றுமையில் ஒற்றுமைதான். இந்நிலையில் சமூகத்தின் ஒற்றுமையை அதிகரிக்க சகோதர, சகோதரிகள், இடையே ஒற்றுமையை தாண்டி அவர்களிடையே பந்தத்தை உருவாக்குவதுதான் ரக்ஷா பந்தன்.
இந்தியாவில் கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்தினை வெளிநாட்டினர் ஆச்சர்யத்துடன் கண்டு களி்ப்பார்கள். அந்த அளவிற்கு ஒற்றுமையின் இலக்கணத்திற்கு உதாரணமாக இந்த கொண்டாட்டத்தினை சொல்லலாம்.
இந்திய மக்கள் அனைவருமே ஒற்றுமையுடன் சாதி, இன, மத பேதமின்றி வாழவேண்டும் என அடிக்கடி உணர்த்துவதுதான் இதுபோன்ற பண்டிகைகள். இதில் சாதி பேதம் இருக்காது. ஒற்றுமைக்கு இலக்கணமே பண்டிகை கொண்டாட்டங்கள்தான் . இந்த ஆண்டில் எந்த தினத்தில் ராக்கி கட்டுவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. , ஆடி பெளர்ணமி என்பது 11 ஆகஸ்ட் 2022 அன்று வருகிறது. த்ரிக் பஞ்சாங்கப் படி, பெளர்ணமி ஆகஸ்ட் 11, 2022 அன்று காலை 10:38 மணிக்கு தொடங்கி 12ஆம் தேதி காலை 8:02 மணிக்கு முடிவடையும். இருப்பினும், பௌர்ணமியுடன் பத்ராவும் இருப்பதால் பலர் ஆகஸ்ட் 12ம் தேதி ராக்கி கட்ட சரியான நாள் என குறிப்பிடுகின்றனர்.
ராக்கி கயிறு
ரக்ஷா பந்தன் நாளில் தங்கைகள் தனக்கு யார் சகோதரன் என நினைக்கின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் ராக்கி கயிற்றினை கட்டுவர். இது ஒரு மஞ்சள் நுாலாக இருக்கும். ராக்கி கயிறு கட்டிக்கொண்ட அந்த சகோதரனும் தனது உடன்பிறந்த , உடன் பிறவா சகோதரிகளுக்கு ஏதாவது பரிசுப்பொருளை தருவார்கள். அதாவது தனது தங்கையாக பாவிக்க கூடியவர்களின் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகவே இருக்கவேண்டும் என்பதும் அதற்கு நான் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்பதனை உணர்த்தும் நிகழ்வுதான் ராக்கி கயிறு கட்டுதல் ஆகும். :
முன்பெல்லாம் வட இந்தியாவில் மட்டுமே வட இந்தியர்களால் கொண்டாடப்பட்ட ரக்ஷா பந்தன் நிகழ்வு தற்போது உலகம் முழுவதும் பரவி அங்கும் கொண்டாடி வருகின்றனர். இதுமட்டும் அல்லாமல் இதன் எதிரொலி தற்போதுதென்இந்தியாவிலும் பரவ துவங்கி பிரபலமாகி வருவதுதான் ஹைலைட்டான விஷயமே.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2