பழையன கழிந்து புதியன புகுந்து தித்திக்கும் பொங்கல்..

Whatsapp Pongal Wishes in Tamil-பொங்கல் திருநாளுக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்க சில வாழ்த்துகளை இங்கே எடுத்துக்கொள்ளுங்க.

Update: 2022-10-15 12:57 GMT

Whatsapp Pongal Wishes in Tamil

Whatsapp Pongal Wishes in Tamil

அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் பொங்கல் விழா, நான்கு நாட்களும் கோலாகலமாக நடைபெறும். உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் இடம் பெற்றிருக்கும்.

முன்பு போல நம்மால் வாழ்த்து அட்டைகளை வாங்கி வாழ்த்து சொல்ல இயலுவதில்லை. இங்கு இருக்கும் இந்த வாட்ஸ்ஆப் வாசகங்களை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு நீங்கள் அனுப்பிக் கொள்ளலாம்.

அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

உங்கள் வாழ்க்கையில் ஆனந்தமும் ஆரோக்கியமும் பெருகட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

விவசாயம் செழிக்கட்டும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

உலகம் முழுவதிலும் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் பொங்கட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

தமிழ் மற்றும் தமிழரின் பெருமை உலகெங்கிலும் பரவட்டும். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

தமிழின் பெருமைகளையும், தொன்மையையும் உலகறியச் செய்வோம். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க இனம் புரியா இன்பம் மனதில் பொங்க.. நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க பொங்கட்டும் தை பொங்கல்.

உழவனை போற்றிட பிறக்குது ஒரு திருநாள் ஆதவனை போற்றிட உதிக்கிறது ஒரு திருநாள் மாட்டினை போற்றிட துள்ளி வருகுது ஒரு திருநாள் உலக மக்கள் கூடி ஒன்றிணைய வருகிறது பொங்கல் திருநாள்

பச்சரிசி அச்சு வெல்லம் கலவை செய்து பொங்கலிட்டு பகலவனை வணங்கிவிட்டு பகைவரையும் வாழ்த்துவோமே

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்

சந்தோஷமும் செல்வமும்நம் வாழ்வில் பொங்கி வர,

சாதி மத பேதமின்றிசங்கடங்கள் ஏதுமின்றி

கை கூப்பி வரவேற்போம் தை பொங்கல் திருநாளை

இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும், அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துகள்

புத்தரிசி புதுப்பானை பொங்கலுடன் கதிரவனை வணங்குவோம்.

கதிரவன் என்றும் நீங்கா ஒளியை தந்திட,

வாழ்க்கை கரும்பைப்போல் இனித்திட,

விவசாயம் செழித்திட, இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கிட

இனிய தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்!

வறட்சி நீங்கி வாழ்க்கை பொங்கட்டும்!

அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்!

இருள் நீங்கி ஒளி பொங்கட்டும்

இல்லம் தோறும் பொங்கல் பொங்கட்டும்

பொங்கல் நல்வாழ்த்துகள்

அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்

பொங்கல் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும். நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்

இல்லங்களில் பொங்கல் பொங்கிட, உள்ளங்களில் ஆனந்தம் பொங்கிட, உங்களுக்கு என் உள்ளம் பொங்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

வருகிறது ஒரு திருநாள்! மண் காத்து, மலை காத்து, உழவையும் உழவனையும் காத்து, பொங்கலிட்டு புன்னகை பொங்க கொண்டாடிடுவோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News