வெயில் காலத்தில் உடலின் நீர்சத்து குறையாமல் இருக்க

இந்த கோடை காலத்தில் உடலின் நீர்சத்து குறையாமல் இருக்க, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வது முக்கியம்.

Update: 2022-04-28 03:38 GMT

தற்போது பகல் நிலவாய் நமது இதயக்கோவிலில் மௌனராகம் பாடிக்கொண்டிருக்கும் வெயில், இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திரமாக தகிக்கப் போகிறது.

இந்த கோடை நாட்களில் உடலின் நீர்சத்து குறையாமல் இருக்க, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வது முக்கியம். அதற்காக குளிர்பானங்களை வாங்கி குடிக்காதீர்கள். இயற்கையோடு இணைந்து நமது பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொண்டாலே நீர்சத்து அதிகமாக கிடைக்கும். 

நாளொன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீரை குடிக்க முடியாதவர்கள், நீர்மோர் குடிக்கலாம். நீர்ச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்ணலாம் . இது உங்களை ஊட்டமாகவும் மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

கோடையில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் சோர்வாக உணர்ந்தாலும், வீட்டிலேயே நாம் தயார் செய்து கொள்ளும் நீர்மோர் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும். அது தவிர சந்தையில் கிடைக்கும் சீசன் உணவுகளான தர்பூசணி, கிர்ணி, நுங்கு, அன்னாசிப்பழம் போன்றவை சோர்வை விரட்டும்.


நுங்கு: இதை விட மிக சிறந்த நீர்சத்து மிக்கது எதுவும் கிடையாது. நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும். இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன


இளநீர்: வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் அருந்தலாம். . காரணம் அதில் உள்ள மினரல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன.


கிர்ணிப் பழம்: சம்மர் சீசனில் அதிக கிடைக்க கூடிய பழங்களில் முக்கியமான ஒன்று இந்த கிர்ணிப் பழம். இதில் நிரம்பி இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.


மாம்பழம்: கோடை காலத்தில் அனைவருக்கும் பிடித்த பழம் பல வெரைட்டிகளில் கிடைக்கும் மாம்பழங்கள் தான். பல இனிப்பு வகைகளிலும் மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது. இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.


தர்பூசணி: வீட்டை விட்டு வெளியே சென்று பார்த்தால் இன்று நாம் அதிகம் காணக்கூடிய கடைகளில் ஒன்றாக இருக்கும் தர்பூசணி விற்கும் கடைகள். கோடைகாலத்தில் பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் தர்பூசணி முக்கியமான ஒன்று. சுமார் 90 சதவீதம் நீரை கொண்டுள்ள இந்த பழம் இதய நோய்களைத் தடுக்க உதவுவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு உதவுகிறது.

அன்னாசி பழம்: வைட்டமின் சி அன்னாசிப்பழத்தில் அதிகம் உள்ளது, இது செல் சேதத்தை எதிர்த்து போராட மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் அதிகம்.


பப்பாளி: வைட்டமின் சி, ஃபைபர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பப்பாளியில் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் வைட்டமின்களின் சிறந்த ஆதாரமாக இது இருக்கிறது.


 ஆரஞ்சு: நம் உடளலுக்கு தேவையான நீர்சத்தை அளித்து உற்சாகமாக வைத்திருக்க செய்யும். ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் இதய செயல்பாடு மேம்படும் மற்றும் இதில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் சரும ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

Tags:    

Similar News