Wedding day wishes in Tamil திருமண பந்தத்தில் இணையும் தம்பதியினருக்கு அழகிய திருமணநாள் வாழ்த்துகள்
சிறப்பான நிகழ்வான திருமணம் நல்லபடியாக முற்று பெற பெரியோர் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆசீர்வாதங்கள் அவசியமாகிறது.;
காட்சி படம்
திருமண தினம் என்பது நம் அனைவரது வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான நிகழ்வு திருமணம் தான். ஒருவருக்கு இல்லற வழக்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதை விட வாழ்க்கையில் பெரிதாக என்ன இருக்கப்போகிறது?
அத்தகைய சிறப்பான நிகழ்வான திருமணம் சிறந்த முறையில் நடைபெற பெரியவர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆசிர்வாதம் மிகவும் அவசியமாகிறது. அதனாலேயே ஊர்கூடி சுற்றம் சூழ அனைவரும் ஒன்று கூடி திருமணத்தை நடத்தி வைக்கின்றார்கள்.
சில சந்தர்ப்ப சூழ்நிலையினால் நமது நெருக்கமான தோழர் மற்றும் தோழி, உணவினர்கள், நண்பர்கள் மற்றும் சில நெருக்கமான நபர்களது திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டும் சமயத்தில் திருமண வாழ்த்து கவிதை நாம் அனுப்பி நமது சந்தோஷசத்தை வெளிக்காட்டலாம்.
பத்துப் பொருத்தங்களைப் பார்த்து, ஒன்பது கோள் நிலைகளை அறிந்து, எட்டுத்திசையிலிருந்தும் உறவை அழைத்து, ஏழு அடி எடுத்து வைத்து, அறுசுவை உணவு படைத்து, பஞ்ச பூதங்களும் சாட்சியாக, நான்கு வேதங்கள் முழங்க, மூன்று முடிச்சுகளால் இரு மனங்கள் ஒன்று சேரும், ஓர் அற்புத பந்தத்தின் உறவே, திருமணம்
கருத்தொருமித்த தம்பதியராய் சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்
உதாரணத் தம்பதியராய், ஊர் போற்ற உறவும் போற்ற
இணைபிரியாது வாழ்வில் நூறாண்டு காலம் வாழ்ந்திடவே... உளம் கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துகள்
ஊரே வியக்கும் வண்ணம் சிறந்த அன்பு கொண்ட நேசங்களாகி
திருமண வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து வாழும் தம்பதியராக
இல்லறத்தில் புரிதல் உணர்வுடன் இரு நெஞ்சங்களும்
சுற்றத்தாரின் வாழ்த்துகளோடு நூறாண்டு காலம் வாழ்ந்திட இந்த இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
கண் மூடி கண்ட கனவெல்லாம்
கண் எதிரே காணும் விழாக்கோலம்
கனவும் நினைவாக வாழ்வில் நகரும்
அன்பின் தோரணம் திருமணம்
மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக
நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக... என் அன்பான வாழ்த்துகள்...!
நாள் பார்த்து பந்தலிட்டு இரு மனதிலும் கனவால் ஊஞ்சலிட்டு முன்றலில் வாழை மரம் நட்டு ஊர் சாட்சியாய் நடக்கும் உயிர்களின் புதுஉலகம் திருமணம்
இணைபிரியா தம்பதியினராய் நூறாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்
இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம் அன்பினில் எழுதிய காவியம் இல்லறம்..
கதிரும் கிழக்கும் போல நிலவும் ஒளியும் போல என்றும் ஒற்றுமையாய் வாழ வாழ்த்துகிறோம்
உல்லாச வானில் சிறகு விரித்த சிட்டுக் குருவிகளாய்
இருவரும் ஆனந்தமாய் வட்டமிட்டுச் சுற்றிவர
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
வண்ண மலர்களின் சுகந்தங்கள் கமழும் நந்தவனமாய்
உம் வாழ்க்கை பூத்துக் குலுங்கட்டும்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
இந்நன்னாளில் சகல ஐஸ்வர்யங்களும்,
வானம் விரித்த மலைச் சாரலாய்
பொழிந்து உங்களுக்கு ஆசி வழங்கட்டும்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
நிலத்தின் பொறுமையும்,
நீரின் இனிமையும்,
காற்றின் குளுமையும்,
நெருப்பின் தூய்மையும்,
ஆகாயத்தின் விசாலமும் பெற்று
சீரோடும் சிறப்போடும் வாழ
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
மலரும் மணமும் போல்
குழலும் இசையும் போல்
நிலவும் குளுமையும் போல்
தமிழும் இனிமையும் போல்
இருவரும் ஒன்றிக் கலந்து, சேர்ந்து வாழ.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!