Marriage wishes in tamil: திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
Marriage wishes in tamil- திருமண நாள் வாழ்த்து கவிதைகள் சிலவற்றை பார்ப்போம்.;
Marriage wishes in tamil- அனைவரின் வாழ்விலும் மிக மிக முக்கியமானது திருமண நாள் ஆகும். திருமண வாழ்க்கை மட்டும் நன்றாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது. திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். இந்த தொகுப்பு திருமண நாள் வாழ்த்து கவிதை பற்றியது. கணவன் மனைவி எனும் உன்னதமான உறவின் தொடக்க நாளான இந்த நாளை "திருமண நாள் வாழ்த்து" ( Wedding Anniversary Wishes ) கவிதை மூலம் வாழ்த்துங்கள்.
நீங்கள் இருவரும் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இனிய திருமணநாள் வாழ்த்துகள்.
இமை போல் வாழ்ந்து இமயம் போல் வளர்ந்து என்றும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துகின்றேன்..!
என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!
இணை பிரியாது இருந்து இனி வரும் நாட்களில் இன்பமாய் இருந்திட என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!
இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை தருகிறீர்கள்.
உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள்!
பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால் உன் இலக்கும் அவள் பயணமும் ஒன்றாகும்!
ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது!
அழகான வாழ்க்கை இது.. அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
கையோடு கை சேர்த்து இணைந்த இதயங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்..
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!
உங்கள் வாழ்க்கை ஒளி போல ஒளிரட்டும் உங்கள் திருமண நாளில் உங்கள் வாழ்க்கை என்றும் சிறப்பாக இருக்க..! என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்..!
கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்!
திருமண நாள் வாழ்த்துகள்!
அன்பென்னும் குடை பிடித்து.. மண்ணின் மனம் மாறாமல் நீங்கள் நிலைத்து என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ..
எனது வாழ்த்துகள்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!
குறையாத அன்பும், புரிந்து கொள்ளும் அன்பும், விட்டுக் கொடுக்காத பண்பும் கொண்டு பல்லாண்டு வாழ்க..
என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்.
உங்கள் ஆண்டுவிழாவில் உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்களை அனுப்புவது,
இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கலாம்!