walnut Tamil Name நன்மைகளை வாரி வழங்கும் வால்நட் எனப்படும் வாதுமைக்கொட்டை
நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர்.;
வால்நட் எனப்படும் வாதுமைக்கொட்டை
walnut Tamil Name வால்நட் என்பதன் தமிழ் பெயர் என்ன?
walnut in tamil- வால்நட் அல்லது அக்ரூட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது தமிழில் வாதுமைக் கொட்டை என்று அழைக்கப்படுகிறது. அது யக்லான்சு இனத்தில் அடங்கியுள்ள யக்லாண்டசியே குடும்பத்தைச் சேர்ந்த யக்லான்சு ரெஜியா மரத்தில் விளையும் கொட்டையாகும். இந்தக் கொட்டையானது மேலோட்டுடன் கூடியதாகும். பச்சையான கொட்டைகள் ஊறுகாய் தயாரிக்கவும் நன்கு விளைந்த கொட்டைகள் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
வால்நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகளை குறித்து காண்போம்.
முடி வளர்ச்சி
வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதம் தாராளமாக இருப்பதால், இதை உட்கொள்வதால் முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
மூளை செயல்பாடு
வால்நட் பருப்பில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரதப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்வதால் மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, மூளை நன்கு செயலாக்கம் சிறப்பாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
மார்பகப் புற்று
தற்காலத்தில் பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பகப் புற்று நோய் இருக்கிறது. வால்நட்ஸ் பருப்பை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி
வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றது.
தூக்கம்
நரம்பு பாதிப்புகளால் சிலருக்கு தூக்கமின்மை ஏற்பட்டு அவதிப்படுவார்கள். இந்த குறைபாட்டால் அவர்களுக்கு மன அழுத்தம் கூட ஏற்படலாம். அதற்குத் தீர்வாக தினமும் இரவு உணவின் போது வால்நட் பருப்பை சாப்பிட்டு வருபவர்களுக்கு இரவில் நன்கு உறக்கம் ஏற்படும். இதன் மூலம் மன அழுத்தமும் குறையும்.
சுவாச நோய்கள்
ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற நுரையீரல் நோய்கள் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும். இவ்வாறான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட் பருப்பை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனையிலிருந்து சற்று நிவாரணம் அளிக்கும் என்று தெரிகிறது.
தோல் பராமரிப்பு
நமது உடலின் வெளிப்புற பகுதியான தோல்தான் உடலின் பாதுகாப்பு கவசம் ஆகும். அத்தகைய தோல் சிறிது ஈரப்பதத்தோடு இருப்பது ஆரோக்கியமானது. வால்நட் பருப்பு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோலின் ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலமாக தோல் சுருக்கங்களும் தடுக்கப்படுகிறது.
இதயம்
உடலுக்கு உயிர் மூச்சாக விளங்குவது இதயம் ஆகும். வால்நட் பருப்பு இதயத் தசைகளை நன்கு வலுப்படுத்துகிறது. இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக இயங்கச் செய்வதற்கு வால்நட் பருப்பு பெரிதும் உதவுகிறது.
வயிறு
நாம் உண்ணும் உணவினை செரிமானம் அடையச்செய்து உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றும் பணியை வயிறு செய்கிறது. வால்நட் பருப்பு அதிகம் உண்பவர்களுக்கு செரிமானத்திறன் மேம்படுகிறது. அது வயிற்றில் அமிலங்களின் சுரப்பை சீராக்குகிறது. அந்த அமிலச் சுரப்பிகள் செரிமானப் பணிகளைத் தூண்டுவதில் பங்காற்றுகிறது.
வலிப்பு நோய்
பிறக்கும் போதே ஏற்படும் சில நரம்பு பாதிப்புகளால் சிலருக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு நிரந்தர தீர்வாக எந்த மருந்துகளும் இல்லை. வலிப்பு நோய் உள்ளவர்கள் வால்நட் பருப்பினை சாப்பிட்டு வந்தால் அது வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
பித்தப்பை
நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகள் உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்கின்றன. பித்தப்பையில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. பித்தப்பை கற்களை கரைப்பதில் வால்நட் சிறப்பாக செயல்படுகிறது.